கழுத்து வலி குணமாக யோகா
வணக்கம் நண்பர்களே..! உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய உடலை நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல் உடலில் எதாவது வலி உண்டாகிறது. அந்த வலி பிரச்சனைகளில் ஒன்றான கழுத்து வலி பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கிறது. இந்த கழுத்து வலி பிரச்சனையை போக்குவதற்கு ஒரே ஒரு யோகா மட்டும் செய்தால் போதும். உங்களுக்கு கழுத்து வலி என்பது இல்லாமல் போகிவிடும். வாருங்கள் அது என்ன யோகா என்பதை தெரிந்துகொள்ள இன்றைய யோகா பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ பெண்களின் மார்பு தசைகள் உறுதியாக இருப்பதற்கு, இந்த ஆசனத்தை செய்தால் மட்டும் போதும்.
சசாங்காசனம் யோகா செய்முறை :
கழுத்து வலி குணமாக சசாங்காசனம் யோகா நீங்கள் தினமும் காலையில் செய்தால் உங்களுடைய வலி விரைவில் குறைந்து விடும்.
முதலில் நீங்கள் காலை சமமாக மடித்து முதுகு எலும்பு நேராக இருக்கும் படி அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு காலை நேராக நீட்டி ஒவ்வொரு காலையும் மடக்கி இரண்டு கைகளும் கால் முட்டியின் மேலே இருக்குமாறு அமர்ந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு இரண்டு கைகளையும் பின்னால் மடக்கி உங்களுடைய தலையின் நெற்றியானது தரையை தொடுமாறு குமிந்து கொண்டு 5 முறை மூச்சை பொறுமையாக இழுத்து விட வேண்டும். இது சசாங்காசனத்தின் முதல் நிலை ஆகும்.
அடுத்ததாக உங்களுடைய இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு உங்களுடைய தலையின் நெற்றியானது தரையை தொடுமாறு குமிந்து கொண்டு 5 முறை மூச்சை பொறுமையாக இழுத்து வெளியே விடுங்கள். இது சசாங்காசனத்தின் இரண்டாவது நிலை ஆகும்.
சசாங்காசனம் பயன்கள்:
இந்த சசாங்காசனம் யோகா கழுத்து வலி குறைப்பதற்கு மட்டும் இல்லாமல் மற்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.
நீங்கள் காலையில் இந்த யோகாவை செய்யும் போது உங்களுடைய இதயம் பாதுகாப்படுகிறது. அதுபோல மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு சிறந்த யோகாசனமாக இருக்கிறது.
உங்களுடைய நுரையீரலில் உள்ள அசுத்த காற்றை வெளியற்றுவதற்கு சசாங்காசனம் யோகா நல்ல பயனைத்தருகிறது.
அதிக கோபம், பதற்றம் ஆகிய பழக்கம் உள்ளவர்கள் இந்த யோகாசனத்தை செய்யும் போது விரைவில் அதிலிருந்து வெளிவருவதற்கு உதவுகிறது.
இதையும் படியுங்கள் 👇 👇 👇
யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.? |
சருமத்தை பொலிவாக்கும் யோகாசனம்..! |
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..! |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |