யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?

who should not exercise in tamil

Who Should Not Exercise inTamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் யோகாவை யாரெல்லாம் செய்ய கூடாது என்றுதான் தெரிந்துகொள்ளபோகிறோம். பொதுவாகவே யோகா செய்வதினால் உடலுக்கு ஆரோக்கியங்களை தந்து வந்தாலும், இதனை செய்வதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறது. நம்மளுடைய உடல் சக்தியை மீறி  உடல் பயிற்சிகளை செய்ய  கூடாது. இதனாலும் உடல் பலவீனம் ஆவதற்கு காரணமாக இருக்கிறது.  மேலும் இந்த யோகாவை யாரெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தியானப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சில குறிப்புகள்

உடல் உபாதை பிரச்சனை:

உடலில் உபாதை பிரச்சனைகள் ஆன காயங்கள் மற்றும் உள் காயங்கள் ஏதேனும் இருந்தால் உடல் பயிற்சி செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலில் உள் காயங்கள் இருக்கும் பொழுது உடல் பயிற்சி செய்வதினால் இரத்த ஓட்டங்கள் தடைபட்டு உபாதைகள் அதிகமாக ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. அவற்றை மீறியும் செய்தால் தசைககள் இறுக்கமடைய செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருவதற்கும் காரணமாக உள்ளது.

காய்ச்சலின் போது செய்யக்கூடாதவை:

பொதுவாகவே காய்ச்சல் பருவ காலங்கள் மாறுபடும் பொழுது உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது.  இது போன்ற நேரங்களில் உடல் பலவீனம் அடைந்திருக்கும், எனவே உடல் சோர்வு நிலையில் இருக்கும் பொழுது யோகா செய்வதை தவிர்ப்பது நல்லது. காய்ச்சல் குணமடைந்ததும் யோகா செய்யலாம்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள்:

உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கும் நேரத்தில் உடல் பயிற்சி கட்டாயம் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை செய்த பிறகு காயங்கள் மறைந்த பிறகு யோகா செய்வது நல்லது. காயங்கள் இருக்கும் பொழுது செய்தால் தசைகள் சேதமடைவதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே அறுவை சிகிச்சை செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உடல் பயிற்சி செய்வது நல்லது.

உடல் காயங்கள்:

உடலில் ஏதேனும் காயங்கள் இருந்தால் உடல் பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். காயத்துடன் உடல் பயிற்சியினை செய்யும் பொழுது உடல் உறுப்புகள் இயங்கும் பொழுது காயம் மிகவும் பெரிதாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உடலில் உள்ள காயங்கள் சரியான பிறகு உடல் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

பொதுவாகவே எந்த ஒரு விஷயங்களையும் செய்யும் பொழுது அளவுக்கு அதிகமாக செய்வதினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com