கண்பார்வை அதிகரிக்க யோகாசனம்..!
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய யோகா பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் பயனுள்ள ஒரு யோகா முத்திரையை பற்றி தான். அப்படி என்ன யோகா முத்திரை இந்த முத்திரை எதற்கு பயன்படும் என்றால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் மொபைல்போன், கணினி போன்றவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சுகளினால் நமது கண்களை பாதிப்பதால் கண்பார்வை குறைகின்றது. அதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை கண்பார்வை குறைபாட்டால் கண்ணிற்கு கண்ணாடி போடும் நிலைமை விரைவில் வந்து விடுகிறது.
இந்த நிலைமையை குறைக்க நமது முன்னோர்கள் கூறியுள்ள யோகா முத்திரையை பயன்படுத்தி நமது கண்பார்வையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அது என்ன முத்திரை அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் காணலாம்.
கண்பார்வை அதிகரிக்க யோகாசனம்:
நமது கண்பார்வை குறைபாடு நீங்க யோகா முத்திரை.
பிராண முத்திரை:
இந்த பிராண முத்திரை நமது கண்களின் நரம்புகள் பலம் பெற, நுரையீரல் நன்கு செயல்பட உதவுகிறது. மேலும் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன நீங்க உதவுகிறது. கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற உதவி புரிகிறது.
முதலாவதாக நன்கு நிமிர்ந்து உட்கார்ந்துக் கொள்ள வேண்டும். பின்னர் கட்டை விரல் நுனியைச் சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். மேலும் நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும், வெளியேயும் விடுங்கள்.
இந்த முத்திரையை அதிகாலையில் 20 நிமிடம் செய்வதன் மூலம் சிறந்த கண்பார்வை பெற உதவி புரிகிறது.
மேல் கூறப்பட்டுள்ள முத்திரையை செய்து முடித்த பிறகு கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் ஒரு பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு முதலில் உங்கள் இரண்டு கை விரல்களையும் மடக்கி கட்டை விரல் மேல் நோக்கி இருக்க வேண்டும். விரல்களை கீழிருந்து மேல்நோக்கி கொண்டு செல்லுங்கள் அப்பொழுது உங்களுடைய கண்ணின் கருவிழி உங்களுடைய கட்டை விரலை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
அப்படியே கை விரல்களை தலைக்குமேல் கொண்டு சென்று 10 வினாடிகள் மேல்நோக்கி விழித்து பாருங்கள். உங்கள் கண்களில் சிறிய வலி ஏற்படும் அதன் பின்பு கைகளை பொறுமையாக கீழே இறக்கி விடுங்கள். அப்படி கைகளை இறக்கும்பொழுதும் உங்களுடைய கண்ணின் கருவிழி உங்களுடைய கட்டைவிரலை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
இந்த பயிற்சியை முடித்த பிறகு உங்கள் உள்ளங்கைகளை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று நன்கு தேய்த்து உங்களுடைய கண்களின் மீது வைத்து நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.
இந்த பயிற்சியையும் அதிகாலையில் 20 நிமிடம் செய்வதன் மூலம் சிறந்த கண்பார்வை பெற உதவி புரிகிறது.
கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |