பக்கவாதம் வராமல் இருக்க யோகா
வணக்கம் நண்பர்களே..! நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உடல்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் யோகாசனம் ஆகியவை செய்ய வேண்டும். எந்த நோயாக இருந்தாலும் அதை வருமுன் காப்பதே நல்லது. அதனால் இன்றைய பதிவில் பக்கவாதம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய யோகாசனம் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க
பக்கவாதம் வராமல் தடுக்க யோகா:
பக்கவாதம் வராமல் இருக்க செய்ய வேண்டிய யோகா மற்றும் அதன் செய்முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. சுகாசனம் முத்திரை:
முதலில் நீங்கள் முதுகு எலும்பு இருக்கும்படி நேராக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு கைகளிலும் உள்ள பெருவிரல் மற்றும் மோதிரவிரல் இரண்டையும் மடித்து மற்ற மூன்று விரல்களும் கீழ் நோக்கி இருக்குமாறு வைத்து மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இந்த சுகாசன நிலையை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு செய்ய வேண்டும்.
2. அபான முத்திரை:
அதன் பின்பு நேராக அமர்ந்து நடுவிரல், மோதிரவிரல் மற்றும் பெருவிரல் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து வைத்து கொண்டு மற்ற இரண்டு விரல்களும் கீழ் நோக்கி இருக்கும் படி வைத்துக்கொண்டு பொறுமையாக 3 முறை மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். இது அபான முத்திரை ஆகும். இது மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு நிமிடம் செய்ய வேண்டும்.
3. இணைப்பு முத்திரை:
மூன்றாவதாக செய்ய போகும் முத்திரை இணைப்பு முத்திரை ஆகும். இந்த முத்திரைக்கு முதலில் இடது கையில் நடுவிரல் மற்றும் பெருவிரலை இணைத்து கொண்டு மற்ற மூன்று விரல்களும் கீழ் நோக்கி இருக்கும் படி வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து வலது கையில் அபான முத்திரையில் வைப்பது போல வைத்து கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை 3 முறை இழுத்து வெளியே விடுங்கள். இந்த முத்திரையை 3 வேளை செய்ய வேண்டும்.
4. அனுசாசன முத்திரை:
அனுசாசன முத்திரைக்கு நேராக அமர்ந்து இரண்டு கைகளில் உள்ள ஆள் காட்டி விரலை மேல் நோக்கி வைத்துக்கொண்டு 3 முறை மெதுவாக மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். இந்த முத்திரையை காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் 👇 👇 👇 யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |