எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!

Advertisement

அதிக லாபம் தரும் தொழில்

எப்போதும் நமது வாழ்க்கையை பற்றி சிந்தனை யாராக இருந்தாலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பலருடைய சிந்தனையாக இருப்பது எப்படியாது சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது தான். ஒருவேளை தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் நினைக்கும் போதும் நாம் தொடங்கலாம் என்று நினைத்த தொழிலை யாராவது முன்னரே செய்து கொண்டு தான் இருப்பார்கள். இது ஒரு பெரிய பிரச்சனையாக பலரிடத்தில் இருக்கிறது. இனி நீங்கள் இதுமாதிரி அனைத்தையும் பற்றி யோசிக்க வேண்டாம். காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு தொழிலை செய்தால் போதும் அதிக லாபம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவிகரமான ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

3D Printing Business Ideas in Tamil:

3d printing business ideas in tamil

எப்போதும் அதிக டிமெண்ட் உள்ள ஒரு தொழிலாக 3d Printing Business இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்தால் போதும் அதிக வருமானம் பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம்.

இந்த 3D Printing Business ஆனது குழந்தைகள் விரும்பக்கூடிய டாய்ஸ், நமக்கு பிடித்த மாதிரியான Wedding Cards மற்றும் Phone கவர் என்று தற்போது அதிகமாக வளம் வரக்கூடிய தொழிலாக இருக்கிறது.

இதனுடைய தேவையும் இப்போது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு 3D Printing Machine மட்டும் போதும். இந்த மிஷினை நீங்கள் வாங்கும் இடத்திலேயே இதனை எப்படி பயன்படுத்துவது என்று அதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

அதுபோல அங்கேயே இந்த தொழிலை தொடங்குவதற்கான மற்ற மூலப்பொருட்களும் கொடுக்கப்படும்.

3D Printing business- யை  நீங்கள் தொடங்குவதற்கு தோராயமாக 50,000 முதலீடு உங்களுக்கு தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்: 

நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு என்று பெரிய கடை தேவையில்லை வீட்டில் 10×10 இடம் மட்டும் போதும். உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் தனியாக கடை அமைத்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதற்கான கெத்து குறையாது..!

தயாரிக்கும் முறை:

அதிக லாபம் தரும் தொழில்

இந்த 3D Business– ல் நீங்கள் வித விதமான விளையாட்டு பொம்மைகள், திருமணம் மற்றும் பிறந்தநாள் பரிகளுக்கு ஏற்ற பொம்மைகள் மற்றும் நாம் பயன்படுத்தும் மொபைல் Back கவர் என இது போன்றவற்றை நீங்கள் தயாரித்து கொள்ளலாம்.

இதில் முக்கியமானது என்னவென்றால் நீங்கள் தயாரிக்கும் பொருள் தரமானது மற்றும் அதை வாங்கும் வாடிக்கையாளருக்கு பிடித்த மாதிரி இருந்தால் போதும் உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து விடும்.

விற்பனை செய்யும் முறை:

இத்தகைய 3d Printing Business- யை பொறுத்தவரை நீங்கள் தயாரிப்பதற்கு ஏற்றவாறு நீங்கள் விலை நிர்ணயித்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் ஒரு மொபைல் Back கவர் தயார் செய்து கொடுத்தீர்கள் என்றால் தோராயமாக நீங்கள் 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை வருமானம் பெறமுடியும்.

நீங்கள் தினமும் விற்பனைக்கு ஏற்றவாறு லாபம் பார்க்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 5,000 வரை வருமானம் பெற முடியும். தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் சம்பாதித்தால் ஒரு வாரத்திற்கு மட்டும் நீங்கள் 35,000 வரையும் வருமானம் பெற முடியும்.

அதுமட்டும் இல்லாமல் நீங்கள் திருமண ஆர்டர் எடுத்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக லாபம் பார்க்கலாம்.

ஆகவே வருங்காலத்தில் நன்றாக முன்னேற்றம் அடையக்கூடிய இந்த தொழிலை நீங்கள் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் அதிக Demand இருக்க போகிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement