வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு மணி நேரத்தில் 4000 ரூபாய் வருமானம் தரும் பேக்கிங் தொழில்..!

Updated On: September 27, 2023 12:50 PM
Follow Us:
500 Investment Business in Tamil
---Advertisement---
Advertisement

500 Investment Business in Tamil

வணக்கம் நண்பர்களே.. நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் தொழில் தொடங்குவதற்கான பலவகையான தொழில்யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் வருமானம் தரும் தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். அது என்ன தொழில் என்று ஒரே யோசனையாக இருக்கிறதா. சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஒரு மணி நேரத்தில் 1,000 ரூபாய் வருமானம் தரும் பேக்கிங் தொழில்..!பச்சை பட்டாணி

பொதுவாக சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு சிலவகையான பொருட்கள் தேவைப்படும் அவற்றில் ஒன்று தான் பச்சை பட்டாணி. பச்சை பட்டாணி பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்காது. அதனை காயவைத்து பேக்கிங் செய்து தான் கடைகளில் விற்பனை செய்வார்கள். அதிகமாக பச்சை பட்டாணி விளையும் இடத்திற்கு செய்து நாம் மொத்தமாக வாங்கி பின் உரித்து பேக்கிங் செய்து விற்பனை செய்வதன் மூலம் தினமும் நல்ல வருமானம் பெறமுடியும்.

முதலீடு:

விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும்போது ஒரு கிலோ பச்சை பட்டாணியை 50 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம், அதுவே உங்களால் விவசாயிகளிடம் வாங்கமுடியாது என்றால் உங்கள் ஊருக்கு பக்கத்திலேயே சில பெரிய காய்கறி மார்க்கெட் இருக்கும் அங்கு சென்று வாங்கினால் ஒரு கிலோ 80 ரூபாய் ஆகும். ஆக 5 கிலோ பச்சை பட்டாணியை மார்க்கெட்டில் வாங்கினால் 400 ரூபாய் முதலீடு தேவைப்படும். அதுவே விவசாயிகளிடம் நேரடியாக வாங்கினால் 250 ரூபாய் தான் முதலீடு தேவைப்படும்.

பேக்கிங் செய்யும் முறை:

பட்டாணியை உரித்து 20 கிராம், 50 கிராம், 100 கிராம், 1/2 கிலோ என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்..!

விற்பனை:

20 கிராம் பட்டாணி பாக்கெட் ஒன்றை 5 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு கிலோ பட்டாணியில் 50, 20 கிராம் பாக்கெட் கிடைக்கும்.

50 கிராம் பட்டாணி பாக்கெட் ஒன்றை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு கிலோ பட்டாணியில் 20, 50 கிராம் பாக்கெட் கிடைக்கும்.

100 கிராம் பட்டாணி பாக்கெட் ஒன்றை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு கிலோ பட்டாணியில் 10, 100 கிராம் பாக்கெட் கிடைக்கும்.

வருமானம்:

ஒரு நாளுக்கு..

50, 20 கிராம் பட்டாணி பாக்கெட்,

20, 50 கிராம் பட்டாணி பாக்கெட்,

10, 100 கிராம் பட்டாணி பாக்கெட்

2, 1/2 கிலோ பட்டாணி பாக்கெட் விற்பனை செய்தால். உங்களுக்கு 4,000 ரூபாய் வரை விற்பனை கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

உங்கள் ஊரில் உள்ள சிறிய சிறிய மளிகை கடை, காய்கறி கடை, தெரு, பெட்டிக்கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். அவர்களும் வாங்கிக்கொள்வார்கள். அல்லது மக்களிடம் நேரடியாகவும் விற்பனை செய்யலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை