அதிக லாபம் தரும் சிறு தொழில் | Athiga Laabam Tharum Tholil in Tamil
ஹாய் நண்பர்களே..! நம்மில் பலருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் அதுவும் குறைந்த முதலீட்டில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது எந்த தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் தெளிவான புரிதல் இருக்காது. அப்படி நீங்களும் என்ன சுய தொழில் செய்ய வேண்டும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சிந்துகொண்டிருக்கிறீர்களா அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.
ஒருவேளை இந்த பதிவில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை தொடங்கி வாழ்வில் முன்னேறலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Black Garlic Production Business in tamil:
இந்த கருப்பு பூண்டு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த கருப்பு பூண்டில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த கருப்பு பூண்டு பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.
இதனால் நாம் இந்த கருப்பு பூண்டை நாம் தயார் செய்து விற்பதன் மூலம் நமக்கு நிறைய லாபம் கிடைக்கும். கருப்பு பூண்டு என்றால் வேறொன்றும் இல்லை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டினை நொதிக்க வைப்பதன் மூலம் கிடைப்பது தான்.
கருப்பு பூண்டு தயாரிக்க மூலப்பொருட்கள்:
இந்த கருப்பு பூண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பூண்டு மற்றும் Black Garlic Fermenting Machine. மேலும் இந்த கருப்பு பூண்டு தயாரிக்கும் தொழில் செய்வதற்கு உணவுத் துறையின் உரிமம் பெற வேண்டும்.
Black Garlic Production Machine:
இந்த கருப்பு பூண்டு தயாரிக்க (Black Garlic Fermenting Machine) இந்த மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலை மாறுபடுகிறது. இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 7,500 ஆகும்.
இந்த மிஷினை பயன்படுத்தி கருப்பு பூண்டை ஒருமுறை நொதிக்க(Fermenting) வைத்து தயார் செய்வதற்கு குறைந்தது 21 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு முறையே நீங்கள் 5 -10 கிலோ வரைக்கும் இந்த மிஷினை பயன்படுத்தி தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த மிஷினை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
விற்பனை செய்யும்முறை :
இந்த கருப்பு பூண்டினை தயாரித்து தோராயமாக 1 கிலோ ரூபாய் 2000 – 2500 வரைக்கும் விற்கலாம். நீங்கள் தோராயமாக ஒரு மாதத்தில் 75 கிலோ விற்பனை செய்தால் 1,50,000 ரூபாய் கிடைக்கும்.
இந்த கருப்பு பூண்டினை நேரடி முறையிலும் விற்கலாம். அல்லது ஆன்லைன் மூலமும் விற்கலாம்.
10×10 இடம் இருந்தால் போதும் 2000 முதலீட்டில் இந்த தொழிலை செய்து அதிக லாபத்தை பெறலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |