Banana Powder Business ideas in Tamil
ஹாய் நண்பர்களே..! சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் ஆனால் குறைந்த முதலீடுதான் போடமுடியும் அதனால் என்ன தொழில் செய்வது என்று சிந்தித்து கொண்டிருக்கிறீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் கூறியுள்ள தொழிலுக்கு குறைந்த முதலீடே போதும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழிலை ஆரம்பித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். சரி வாங்க அது என்ன தொழில் அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியெல்லாம் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Raw Banana Powder Business idea in Tamil:
பொதுவாக வாழைக்காய் பொடி என்பது பல நன்மைகளை கொண்டுள்ளதால் இதனை பல இடங்களில் பயன்படுத்துகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகளில், அழகு சாதன பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் மற்றும் ஐஸ்கிரீம் தயார் செய்யும் இடங்களில் போன்ற இன்னும் பல இடங்களில் இந்த வாழைக்காய் பொடி பயன்படுத்தப்படுகிறது.
அதனால் நாம் இந்த வாழைக்காய் பொடியை தயார் செய்து விற்பதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
வாழைக்காய் பவுடர் தயாரிக்க மூலப்பொருட்கள்:
இந்த வாழைக்காய் பொடி தயாரிக்க நல்ல நிலையில் உள்ள வாழைக்காய் மற்றும் Food dehydrator Machine. மேலும் இந்த வாழைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழில் செய்வதற்கு உணவுத் துறையின் உரிமம் பெற வேண்டும்.
இந்த வாழைக்காய் பொடி தொழில் செய்வதற்கென்று தனியாக இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தாலே போதும்.
Food dehydrator Machine :
இந்த வாழைக்காய் பொடி தயாரிக்க தேவைப்படும் (Food dehydrator Machine) இந்த மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலை மாறுபடுகிறது. இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 4,500 ஆகும்.
இந்த Food dehydrator Machine பயன்படுத்தி ஒருமுறையில் 5-10 கிலோ வரை வாழைக்காய்களை உலர வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
வாழைக்காய் பவுடர் தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள வாழைக்காய்களின் தோலை நீக்கிவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி பிறகு அவற்றை Food dehydrator Machine-யில் வைத்து நன்கு உலர வைத்துக் கொள்ளுங்கள்.
உலர வைத்து வாழைக்காய் துண்டுகளை மிக்சியை பயன்படுத்தி நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இந்த பொடியை பேக்கிங் செய்து விற்கலாம்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயார் செய்து வைத்துள்ள வாழைக்காய் பொடியை தோராயமாக 1 கிலோ 200 – 350 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அதனால் ஒரு நாளைக்கு தோராயமாக 10 கிலோ விற்பனை செய்தால் ரூபாய் 2,000 – 3,500 ரூபாய் கிடைக்கும்.
இந்த பொடியை நேரடியாகவும் விற்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம்.
குறைந்த முதலீட்டில் மாதம் ரூபாய் 1,50,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |