இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

Advertisement

Best Business Ideas in India

சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நம் பதிவில் நிறைய யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தொழில் காலத்திற்கும் அழியாத தொழில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள், முதலீடு போன்ற தகவலை படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Rental Crockery Business:

Rental Crockery Business

சுப நிகழ்ச்சி என்றாலே உணவு தான். அந்த உணவு தயாரிக்க தேவையான பாத்திரங்கள், சுப நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உட்காருவதற்கு தேவைப்படுவது நாற்காலி. இந்த பொருட்கள் எல்லாம் சொந்தமாக வாங்கி வைக்க மாட்டோம், வாடகைக்கு தான் எடுப்போம். அதனால் வாடகை பாத்திரை கடை தொழிலை செய்யலாம். இந்த தொழிலை செய்தால் சுப நிகழ்ச்சி மட்டுமில்லை, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இதனுடைய தேவை கண்டிப்பாக இருக்கும். வாங்க இந்த தொழிலை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

மூலப்பொருட்கள்:

நாற்காலி – 200

Dining Table – 10

தண்ணீர் ஊற்றும் Jug- 5

பெரிய பாத்திரம், சின்ன பாத்திரம் என ஒவ்வொன்றிலும் 3 வாங்கி கொள்ளலாம்.

சாம்பார், இரசம், மோர் போன்றவைக்கு வாலி ஒவ்வொன்றிலும் 3 வாங்கி கொள்ளலாம்.

வறுவல், பொரியல், கூட்டு போன்றவைக்கு வாலி ஒவ்வொன்றிலும் 3 வாங்கி கொள்ளலாம்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை மொத்தமாக கிடைக்க கூடிய இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும்.

நஷ்டம் இல்லாத தொழிலை செய்து தினமும் 4000 ரூபாய் வரை சம்பாதியுங்கள்..!

முதலீடு:

இந்த தொழிலுக்கு பாத்திரம், இடம் என்று மொத்தமாக இந்த தொழில் செய்வதற்கு 4 லட்சம் தேவைப்படும்.

இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு உங்கள் வீட்டிலே இடம் இருக்கிறது என்றால் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால் வாடகைக்கு இடம் பார்க்க வேண்டும். எப்படி இடம் பார்த்தாலும் 200 சதுர அடி இருக்க வேண்டும்.

வருமானம்:

ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நடக்கும். ஒரு நாற்காலியை வாடைகைக்கு விட்டால் ஒரு நாற்காலி 10 ரூபாய் என்று வைத்து கொண்டால் 200 நாற்காலியில் 2000 – ரூபாய் கிடைக்கும்.

டைனிங் டேபிள் ஒன்று 30 ரூபாய் என்று வைத்தால் 10 டைனிங் டேபிள் 300 ரூபாய் கிடைக்கும். சமையலுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விட்டால் 1,250 ரூபாய் கிடைக்கும். மொத்தமாக 4000 ரூபாய் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு பாத்திரத்தை வாடகைக்கு விட்டால் 4000 ரூபாய் கிடைக்கும். அதுவே 10 நாட்களுக்கு விட்டால் 40000 ரூபாய் கிடைக்கும்.

இந்த தொழில் ஆரம்பித்து 6 மாதத்தில் நீங்கள் லாபத்தை பார்க்க முடியாது. வருமானம் கிடைக்கும் ஆனால் நீங்கள் முதலீடு செய்த பணத்தை 6 மாதத்தில் எடுத்து விடலாம். இதுவே மாதம் முழுவதும் சுப நிகழ்ச்சி நடக்க கூடிய மாதம் இருக்கிறது. அப்போது உங்களுக்கு வருமானம் கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். அதனால் யோசிக்காமல் இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்கள்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement