Black Garlic Business in Tamil
வணக்கம் நண்பர்களே. சுயதொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளளதாக இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் வேலைக்கு செல்வதை விட சுயதொழில் தொடங்குவதே மிகவும் நல்லது. எனவே இதனை கருத்தில் கொண்டு பலரும் சுயதொழில் செய்யலாம் என்று நினைப்பார்கள். ஆனால் என்ன தொழில் தொடங்குவது..? எவ்வளவு முதலீடு தேவை..? எப்படி தொடங்குவது..? போன்ற பல கேள்விகள் இருக்கும். எனவே இக்கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக இப்பதிவில் அருமையான சிறுதொழில் பற்றிய விவரங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
பூண்டு என்றாலே மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதைவிட கருப்பு பூண்டு மிகவும் மருத்துவம் குணம் நிறைந்தது. இதனின் தேவையும் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே கருப்பு பூண்டு தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் இப்பதிவில் கருப்பு பூண்டு எப்படி தயாரிப்பது..? இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்..? போன்றவற்றை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How Do You Make Black Garlic Business in Tamil:
தேவையான இடம்:
இத்தொழில் தொடங்க பெரிதாக இடம் ஏதும் தேவையில்லை. உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும் இத்தொழிலை தொடங்கலாம்.
தேவையான சான்றிதழ்:
- கருப்பு பூண்டு தொழிலை தொடங்க FSSAI சான்றிதழ் பெற்றிக்க வேண்டும்.
- ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தால் GST Registration சான்றிதழ் தேவை.
முதலீடு:
இத்தொழிலை தொடங்க Automatic Fermentation Machine தேவை. இது ரூ.39,500-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த மெஷினை தவிர உங்களுக்கு தேவைப்படும் முதலீடு என்றால் 500 ரூபாய் மட்டுமே ஆகும்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்..
மூலப்பொருட்கள்:
- பூண்டு
- Automatic Fermentation Machine
- பேக்கிங் கவர் அல்லது பாட்டில்
தயாரிக்கும் முறை:
முதலில் நல்ல நிலையில் உள்ள பூண்டினை வாங்கி கொள்ளுங்கள். இதனை Automatic Fermentation மெஷினில் உள்ள ட்ரேயில் வைத்து மூடிக்கொள்ளுங்கள்.
Automatic Fermentation மெஷின் மின்சாரம் மூலம் செயல்படுகிறது. எனவே இந்த இயந்திரம் 12 அல்லது 14 நாட்களில் பூண்டினை கருப்பு பூண்டாக மாற்றி தருகிறது.
பேக்கிங் செய்யும் முறை:
உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் கவரை வாங்கி கொள்ளுங்கள். அதாவது 100 கிராம், 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் கவரை வாங்கி தயார் செய்து வைத்துள்ள பூண்டினை பேக் செய்து கொள்ளுங்கள்.
தயார் செய்த கருப்பு பூண்டினை முழுதாகவோ அல்லது பல்லு பல்லாகவோ பிரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!
விற்பனை செய்யும் இடங்கள்:
- சூப்பர் மார்க்கெட்
- ஹோட்டல்
- டிபார்ட்மெண்ட் ஸ்டார்
- சூப் கடை
- ஆன்லைன் ஸ்டோர்
கிடைக்கக்கூடிய வருமானம்:
1 கிலோ கருப்பு பூண்டு ஆன்லைன் சந்தைகளில் ரூ.5000/- என விற்பனை செய்யப்படுகிறது. எனவே நீங்கள் 1 கிலோ கருப்பு பூண்டினை ரூ.4000/- ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கணக்கில் கொள்ளுங்கள். அப்படி என்றால் 1 நாளைக்கு 1 கிலோ கருப்பு பூண்டினை விற்பனை செய்தால் 1 மாதத்திற்கு 1,20,000 ரூபாய் வரை லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் சேர்த்து பெறலாம்.இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |