வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Best Daily Income Business in Tamil

Best Daily Income Business in Tamil

இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் சுயதொழில் செய்தால் தான் பண தேவையை பூர்த்தி செய்ய முடியும். அப்படி சுய தொழில் செய்வதற்கு சிலரிடம் தேவையான பணம் இருக்காது. ஆனால் முதலீடு குறைவாக உள்ள பல தொழில்கள் உள்ளன. அவற்றை செய்தால் போதும் தினமும் கை  நிறைய சம்பாதிக்கலாம். அந்த வகையில் முதலீடு குறைவாக உள்ள ஒரு தொழில் பற்றி தான் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இந்த தொழிலை தொடங்குவதற்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே தேவைப்படும். ஆனால் தினமும் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஓகே வாருங்கள் அந்த தொழில் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போட்டி இல்லாத அருமையான தொழில்:

நாம் இப்பதிவில் கொடுத்துள்ள தொழில் பீட்ரூட் மால்ட்  தொழில் பற்றி தான். நாம் அனைவரும் பீட்ருட்டை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த பீட்ரூட் மால்ட் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆனால் இந்த பீட்ரூட் மால்ட் சந்தைகளில் அதிகமாக விற்கப்படுகிறது.

இந்த பீட்ரூட் மால்ட்டை நாம் வீட்டிலே தயாரித்து விற்பனை செய்யலாம். இந்த பீட்ரூட் மால்ட்டை பல்வேறு உணவு பொருட்களில் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இது நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. எனவே இந்த தொழிலை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

Beetroot Malt Making Business in Tamil:

 daily income business ideas in tamil

இத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள்:

  • பீட்ரூட்
  • நாட்டு சர்க்கரை
  • பாதாம்
  • முந்திரி
  • ஏலக்காய்
  • பேக்கிங் மெஷின்

இத்தொழிலுக்கு தேவையான முதலீடு:

 குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்

பேக்கிங் மிஷின் வாங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ. 1000 தேவைப்படும். இந்த பேக்கிங் மிஷினின் விலையானது அவற்றின் மாடலுக்கு ஏற்ப மாறுபடும். மேலும் முந்திரி, பாதாம், ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை போன்றவை வாங்குவதற்கு ரூ. 2000 தேவைப்படும். இவை இருந்தால் போதும் இத்தொழிலைத் தொடங்கலாம்.

Product வீணாகாதுனு தெரிஞ்சா இந்த தொழிலை எல்லாரும் உடனே செய்வாங்க தெரியுமா..!

 

தேவையான இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு தனியாக எந்த இடமும் தேவையில்லை. உங்களின் வீட்டிலே ஒரு தூய்மையான இடம் இருந்தால் போதும். அந்த இடத்திலேயே  இத்தொழிலை செய்யலாம்.

தேவையான ஆவணங்கள்:

இத்தொழில் உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI (Food Safety and Standards Authority of India) சான்றிதழ் வாங்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் இதை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய போகிறீர்களா என்றால் GST சான்றிதழ் வாங்க வேண்டும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பாதாமை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் தோலை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தோல் நீக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த வறுத்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பீட்ரூட்களின் தோல்களை நீக்கிவிட்டு சரியான அளவில் துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரைத்து வைத்த  பீட்ரூட்டினை சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பவுடரை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பீட்ரூட்டில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சிறு சிறு கட்டிகளாக வரும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதை அடுப்பிலிருந்து எடுத்து நன்றாக ஆறவிடுங்கள்.

நன்றாக ஆறியதும், அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..!

 

பேக்கிங் செய்யும் முறை:

 daily income business in village

அரைத்து வைத்த இந்த பொடியை பேக்கிங் மிஷின் வைத்து பேக் செய்து கொள்ளுங்கள். அதாவது 1/4 கிலோ, 1/2 கிலோ, 1 கிலோ என உங்களின் தேவைக்கேற்ப பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் இடங்கள்:

இந்த பேக்கிங் செய்து வைத்துள்ள பீட்ரூட் மால்ட்டை உங்கள் பகுதிகளில் உள்ள மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

இப்பொழுது உள்ள நிலவரப்படி, 1/4 கிலோ பீட்ரூட் மால்டின் விலை குறைந்தது ரூ. 250 லிருந்து விற்பனை ஆகிறது. இந்த விலையை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் 1 கிலோ விற்பனை செய்தால் 1000 ரூபாய் வருமானம் வரும். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு 5 கிலோ விற்பனை செய்தீர்கள் என்றால் 12,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil