டீலர்ஷிப் எடுப்பது எப்படி | Dealership Business Ideas in Tamil

Dealership Business Ideas in Tamil

டீலர்ஷிப் என்றால் என்ன | Dealership Business in Tamil

டீலர் தொழில் 2022: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Dealership என்ன என்பதை பற்றியும் அதற்கு தேவையான சில யோசனைகள் பற்றியும் பார்க்கலாம். டீலர்ஷிப் என்பது விநியோகஸ்தருக்கும் வியாபாரிக்கும் இடையேயான ஒரு தொடர்பு. முதலில் என்ன தொழிலை செய்ய போகிறீரகள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதற்கு மொத்த முதலீடு எவ்வளவு என்பதையும் கணக்கிட்டு வைத்திருக்க வேண்டும். யாருடன் Deal வைக்க போகிறீர்கள் என்பதையும் அந்த நிறுவனத்தை பற்றியும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். சரி வாங்க 10 வகையான டீலர்ஷிப் தொழில் பற்றி பார்க்கலாம்.

டீலர் தொழில் 2022 | Dealership Business Ideas in Tamil

ராம்கோ  டீலர்ஷிப் – Ramco Dealership – டீலர் தொழில்:

dealership ideas in tamil

டீலர் தொழில் : இவர்களுடன் நீங்கள் டீலர்ஷிப் செய்ய முயன்றால் அதற்கு உங்களிடம் ஒரு 500 Sq. ft இடம் தேவைப்படும். மேலும் இதற்கான Company Registration மற்றும் Trade License ஆவணங்களை நீங்கள் முனிசிபாலிட்டியில் வாங்க வேண்டும். GST Certificate மற்றும் ஆறுமாத Bank Statement தேவைப்படும். மேலும் இதற்காக 1.5 To 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் எனில் ramcocements.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

ஆவின் மில்க் டீலர்ஷிப் – Aavin Milk Dealership:

dealership ideas in tamil

Dealership Business: ஆவின் ஒரு அரசு நிறுவனம். ஆவின் நிறுவனத்தினுடைய பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களிடம் 120 Sq.Ft இடம் இருக்க வேண்டும். உங்களின் வயது 21-ற்குள் மேல் வரை இருக்க வேண்டும். வேலையாட்கள் குறைந்தபட்சம் 2 நபர் வேண்டும். மேலும் இதற்கான ஆவணங்கள் ஆதார்கார்டு, பான்கார்ட் மற்றும் உங்கள் கடைக்கான Address proof இருக்க வேண்டும். இதற்கான முதலீடு Rs.25,000/- மட்டுமே. இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் எனில் aavinmilk.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

பிரான்சிஸ் பிஸினஸ் ஐடியா 2022

ஏசியன் பெயிண்ட் டீலர்ஷிப் – Asian Paints Dealership:

dealership endral enna

டீலர் தொழில்: இந்த நிறுவனத்தின் பெயிண்ட்-ஐ விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்காக உங்களிடம் இடம் 500 முதல் 1000 சதுர அடி, Colour Mixing Machine, Computer மற்றும் Printer இருக்க வேண்டும். இதற்கான ஆவணங்கள் Trade License, GST மற்றும் நில ஆவணங்கள் (Land Documents) இருக்க வேண்டும். மேலும் இதற்காக 3.5 முதல் 4 லட்சம் முதலீடு இருக்க வேண்டும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் எனில் asianpaints.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

சுகுணா சிக்கன் டீலர்ஷிப் – Suguna Chicken Dealership:

dealership eduppadhu eppadi

Dealership Business in Tamilnadu: இந்த நிறுவனத்தின் கரி மற்றும் முட்டைகளை விற்பதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களுடைய நிலப்பரப்பு 300 முதல் 400 சதுர அடி, 3 Phase மின்சாரம் மற்றும் வேலையாட்கள் 1 நபராவது இருக்க வேண்டும். மேலும் GST, FSSAI மற்றும் UDYOG Aadhar card தேவைப்படும். இந்த டீலர்ஷிப்காக உங்களுடைய முதலீடு 3.5 லட்சம் இருக்க வேண்டும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் எனில் sugunafoods.co.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

பிரிட்டானிய டீலர்ஷிப் தொழில் – Brittania Dealership:

dealership business in tamil

டீலர் தொழில் 2022: இந்த நிறுவனத்தின் Cookies மற்றும் Chocolates விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்காக உங்களிடம் நிலப்பரப்பு 1500 சதுர அடியும், வேலையாட்கள் 3 To 6 நபர்களும் மற்றும் Two Wheeler அல்லது Four Wheeler வைத்திருக்க வேண்டும். இதற்கான முதலீடு 2 லட்சம்  வேண்டும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் எனில் britannia.co.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

அல்ட்ராடெக் சிமெண்ட் – டீலர் தொழில்:

டீலர் தொழில் 2021

டீலர் தொழில்: இந்த நிறுவனத்தின் சிமெண்டை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களிடம் 1000 முதல் 2000 சதுர அடி உள்ள இடம் இருக்க வேண்டும். இந்த டீலர்ஷிப்பை எடுப்பதற்கு பான் கார்டு, NSDL, NOC, Address proof  போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இதற்கான முதலீடு ஆறு லட்சம் முதல் எட்டு லட்சம் தேவைப்படும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்குவதற்கு நீங்கள் ultratechcement.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

அம்புஜா சிமெண்ட் – Dealership Business Ideas in Tamil:

dealership in tamil

Dealership Business Ideas in Tamil: இந்த நிறுவனத்தின் சிமெண்டை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்காக உங்களிடம் நிலப்பரப்பு 1000 முதல் 1500 Square Feet இடம் இருக்க வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டு, ஒட்டர் ஐடி, EB Bill, Trade Licence, NOC சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். இதற்கான முதலீடு 1 லட்சம் முதல் 2 லட்சம் தேவைப்படும். இவர்களுடன் டீலர்ஷிப் தொடங்குவதற்கு இவர்களுடைய அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

எவரெஸ்ட் மசாலா – டீலர்ஷிப் எடுப்பது எப்படி?

dealership business ideas in tamil

Dealership Business in Tamil: மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களிடம் 100 முதல் 200 சதுர அடி உள்ள கடை இருக்க வேண்டும் மற்றும் 300 சதுர அடி உள்ள குடோவுன் இருக்க வேண்டும். வேலையாட்கள் 2 நபர் மற்றும் ஒரு வண்டி இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுப்பதற்கான முதலீடு 2 லட்சம் முதல் 3 லட்சம் தேவைப்படும். இவர்களுடன் டீலர்ஷிப்பை பெறுவதற்கு நேரடியாக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் – டீலர் தொழில் 2022:

dealership business in tamilnadu

டீலர் தொழில்: இந்த நிறுவனத்தின் அழகு சாதன பொருட்கள், Water Purifier போன்றவற்றை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களிடம் 1000 சதுர அடி உள்ள இடமும், வேலையாட்கள் 2 நபரும், ஒரு வண்டியும் இருக்க வேண்டும், மேலும் அலுவலகத்தின் இட வசதி 100 சதுர அடி இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுப்பதற்கான முதலீடு 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ஆகும். இவர்களுடன் டீலர்ஷிப்பை பெறுவதற்கு hul.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Aachi Foods – டீலர் தொழில் 2022:

டீலர்ஷிப் எடுப்பது எப்படி

டீலர் தொழில் 2022: இந்த நிறுவனம் தயாரிக்கும் மசாலா பொருட்கள், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப். இதற்கு உங்களிடம் 150 சதுரடி உள்ள இடமும், GST சான்றிதழ், வண்டி இருக்க வேண்டும். இதற்கான முதலீடு Rs.50,000/- தேவைப்படும். இவர்களுடன் டீலர்ஷிப்பை பெறுவதற்கு நேரடியாக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022