நஷ்டம் இல்லாத தொழில்
நாம் எப்போதும் சொந்தமாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் முதலில் என்ன தொழில் செய்வது என்று தான் யோசிப்போம். அதற்கு அடுத்ததாக நாம் செய்யும் அந்த தொழில் எக்காலத்திலும் நஷ்டம் ஏற்படாதவாறு இருக்க வேண்டும் மற்றும் நல்ல டிமாண்ட் உள்ள தொழிலாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய சிந்தனையாக உள்ளது. இதுபோன்றவற்றை சிந்தித்து அதன் பிறகு தொழில் செய்வது தான் நல்லது. ஏனென்றால் சுய தொழில் என்பது பல வருடத்திற்கு நிலைத்து நிற்கும் ஒரு தொழிலாக உள்ளது. ஆகையால் இவற்றை எல்லாவற்றிக்கும் ஒத்து போகின்ற ஒரு தொழிலை பற்றி தான் இன்று தெறிந்துகொள்ள போகிறோம். மேலும் அது என்ன தொழில் அந்த தொழிலை எப்படி செய்வது போன்ற அனைத்து தகவலையும் பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
High Income Business Ideas in Tamil:
அனைவருடைய வீட்டிற்கும் பாதுகாப்பாக உள்ள Door Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழில் ஆனது என்றும் கொஞ்சம் கூட டிமாண்ட் குறையாமலும் மற்றும் நஷ்டம் இல்லாத தொழிலாகவும் இருக்கிறது.
இந்த தொழிலை நிறைய நபர்கள் செய்து இருந்தாலும் கூட நீங்கள் அதில் எப்படி மற்றவர்களை விட அதிக வருமானம் பெறலாம் என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முதலீடு | மூலப்பொருள்:
இத்தகைய தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் அது கதவு தான். அதுமட்டும் இல்லாமல் கதவுக்கான Design என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த Door Business-ற்கு ஆன முதலீடு என்று முதலில் தோராயமாக 50,000 ரூபாய் தேவைப்படும். அதன் பின்பு உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு முதலீடு தேவைப்படும்.
எந்த இடத்தில் கடை வைப்பது:
வியாபாரம் என்றால் அதற்கு கட்டாயமாக கடை தேவைப்படும். ஆனால் அந்த கடையினை மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடத்தில் துவங்கினால் தான் நல்ல வருமானம் பெறலாம். மேலும் அனைவருக்கும் கடை இருப்பதும் தெரியவரும்.
இதையும் படியுங்கள்⇒ எந்த காலத்திலும் இந்த தொழிலுக்கான மவுஸ் குறையாது
தொழில் தொடங்குவது எப்படி..?
முதலில் நீங்கள் கதவில் நிறைய Size மற்றும் Design இருப்பதால் அதற்கு ஒரு கேட்லாக் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஏதாவது 2 விதமான கதவுகளை மட்டும் கடையில் வைத்து இருந்தால் போதும். ஏனென்றால் உங்களுடைய கடைக்கு ஆர்டர் வந்தவுடன் நீங்கள் அதற்கு ஏற்றவாறு கதவு உடனே வாங்கி விற்பனை செய்து கொள்ளலாம்.
இந்த தொழிலை நீங்கள் 2 விதமாக செய்யலாம். முதலில் நீங்களே கதவினை வேலைக்கு ஆட்கள் வைத்து தயார் செய்யலாம்.
அப்படி இல்லை என்றால் மொத்தமாக Wholesale கடையில் கதவு வாங்கியும் விற்பனை செய்யலாம். ஆகாயல் உங்களுடைய விருப்பம் அதுவோ அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
விற்பனை செய்யும் முறை:
தயார் செய்து வைத்துள்ள கதவினை உங்களுடைய கடையில் மட்டும் வைத்து விற்பனை செய்யாமல் பர்னிச்சர் கடை, வீடு கட்ட பொருட்கள் வாங்கும் கடை ஆகிய இடங்களில் கூட நீங்கள் கமிஷன் முறையில் பேசி வைத்து கொண்டு வருமானம் பெறலாம்.
வருமானம்:
நீங்கள் விற்பனை செய்யும் கதவின் அளவு மற்றும் மாடல் போன்றவற்றை பொறுத்து தான் அதற்கு ஏற்றவாறு வருமானம் பெற முடியும். மேலும் நல்ல தரமான கதவாக இருந்தால் இன்னும் கூடுதலான வருமானம் மற்றும் லாபத்தை பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |