Dosa Business Ideas
இன்றைய கால கட்டத்தில் இருவரும் வேலை பார்த்தால் தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும். அதனாலேயே இருவரும் சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் வீட்டில் சில பெண்களை வெளியில் சென்று வேலை பார்க்க அனுமதிப்பில்லை. வீட்டிலேயே எதாவது வேலை இருந்தால் பார் என்று சொல்வார்கள். அதனால் வீட்டிலேயே என்ன சுய தொழில் செய்வது என்று பலரும் யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க அது என்ன சுயதொழில் என்று படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Dosa Business Ideas:
வீட்டில் இருந்து பல தொழில்கள் செய்யலாம். அதில் தோசை தொழில் என்பது என்றும் அழியாத தொழில். தோசை தொழில் என்று இல்லை உணவு தொழில் என்பது என்றுமே அழியாத ஒன்று. முழு நேரமும் இந்த தொழிலை செய்ய தேவையில்லை. காலை மற்றும் மாலை நேரத்தில் 3 மணி நேரம் வேலை செய்தால் போதுமானது.
இடம்:
உங்கள் வீட்டிலையே இடம் இருந்தாலே போதுமானது. அதுவும் உங்கள் வீடு MAIN இடமாக இருக்க வேண்டும். சிறிய அளவில் இந்த தொழிலை செய்ய போகிறீர்கள் என்றால் தள்ளுவண்டி போதுமானது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக இருத்தல் வேண்டும்.
மூலப்பொருட்கள்:
தள்ளுவண்டியில் தொழில் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் அடுப்பு, பாத்திரம், நாற்காலி, தோசை மாவு, சட்னி, சாம்பார் செய்வதற்கு தேவையான காய்கறிகள் போன்றவை தேவைப்படும்.
நீங்கள் கலக்க கலக்க காசு வந்துகிட்டே இருக்கும் இந்த தொழிலை சும்மா செஞ்சுப்பாருங்க..!
தோசை வகைகள்:
- மாவு தோசை
- வெங்காய தோசை
- முட்டை தோசை
- மசாலா தோசை
- பொடி தோசை
- கேரட் தோசை
- கோதுமை தோசை
- ரவா தோசை
- மைதா மாவு தோசை
நீங்கள் மேல் கூறப்பட்டுள்ள தோசை வகைகளை மட்டுமே செய்தால் போதும். அதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி, சாம்பார் போன்றவை இருந்தாலே போதுமானது.
இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் தொழில் ஆரம்பியுக்கும் இடத்திற்கு பக்கத்தில் எத்தனை ஹோட்டல் உள்ளது என்று ஆராய வேண்டும். அந்த ஹோட்டல்களில் என்னென்ன உணவுகள் உள்ளது. மக்கள் எதை அதிகமாக விரும்புகின்றனர் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வருமானம்:
ஒரு தோசையின் விலை 35 ரூபாய் என்று வைத்து கொள்வோம். காலை மற்றும் மாலை நேரங்களில் 100 தோசை விற்கிறீர்கள் என்றால் 3500 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு தோசை வகைகளை பொறுத்து விலை மாறுபடும்.
முதலீடே செய்யாமல் இந்த தொழில்களை செய்வதற்கு சரியான நேரம் இது தான் தவற விடாதீர்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |