முதலீடு இல்லாமல் வேகமாக மற்றும் எளிதாக பணம் சம்பாதிக்க டிராப்ஷிப்பிங் தொழில்

Advertisement

முதலீடு இல்லாத தொழில் | Dropshipping Business Ideas in Tamil

சிலருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருக்கும். ஒரு சிலரிடம் முதலீடு இருக்கும் ஐடியாக்கள் இருக்காது. அதில் ஒரு சிலரிடம் நல்ல ஐடியாக்கள் இருக்கும் ஆனால் தொழிலை செய்வதற்கு தேவையான இடவசதியும், முதலீடும் இருக்காது. அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த விதமான இடவசதியும், அதிகமான முதலீடும் இல்லாமல் செய்ய கூடிய ஒரு சூப்பரான தொழிலை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Dropshipping Business Ideas in Tamil:

Dropshipping Business Ideas in Tamil

 • டிராப்ஷிப்பிங் தொழில் மூலம் நீங்கள் எவ்வளவு பொருட்கள் வேண்டுமானாலும் விற்கலாம். அதற்கு உங்களிடம் கையில் பொருட்கள் (Stock) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொழிலுக்கு உங்களிடம் இடவசதியோ, கடையோ இல்லாமல் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் தான் Dropshipping.
 • இந்த தொழிலுக்கு உங்களுக்கு ஒரு சப்ளையர் (மொத்த விற்பனையாளர்) வேண்டும். சப்ளையர்களுக்கு உதாரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலி எக்ஸ்பிரஸைக் (aliexspress.com) குறிப்பிடலாம். இது தவிர மற்ற சப்ளையர்களும் உள்ளனர்.
 • E-Commerce Store இருக்க வேண்டும். அதில் நீங்கள் விற்பனை செய்ய போகும் பொருட்களின் படங்கள், விவரங்கள், பொருட்களின் பட்டியல் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
 • வாடிக்கையாளர் உங்களிடம் பொருள் வாங்க வருகிறார்கள் என்றால் அதனை சப்ளையருக்கு தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் உங்களுக்கு பணம் செலுத்திய பின்னரே நீங்கள் உங்கள் சப்ளையருக்கு பணம் செலுத்த வேண்டும்.
 • மொத்த விற்பனையாளரிடமிருந்து பொருள் நேரடியாக வாடிக்கையாளரை சென்றடையும்.
 • ஒரு விற்பனையாளராக நீங்கள் உங்களுடைய விற்பனை பொருட்களை E-Commerce Store-ல் வைத்திருப்பது தான்.

Shopify Dropshipping:

Dropshipping Business Ideas in Tamil

 • Dropshipping Business Ideas in Tamil: ட்ராப்ஷிப்பிங்கை Shopify மூலம் செய்யலாம். இது ஒரு E-Commerce Store தொடங்குவதற்கான அருமையான Platform. வேர்ட்பிரஸ் மாதிரியான ஒரு செயலி.
 • இந்த Shopify-ல் நீங்கள் சொந்தமாக ஒரு E-Commerce Store தொடங்கி, அதில் ஒரு Website create செய்து உங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
 • இதில் நீங்கள் அதிக லாபத்தை பெற முடியும். Shopify-ல் தொழிலை தொடங்குவதற்கு நீங்கள் Domain, Website, Ads போன்றவற்றிற்கு முதலீடு செய்ய வேண்டும்.

Dropshipping E-bay:

Dropshipping Business Ideas in Tamil

 • Dropshipping Business Ideas in Tamil: E-bay-ல் உங்களுக்கு E-Commerce Store, Website create செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மொத்த வியாபாரியிடமிருந்து பொருட்களை வாங்கி E-Pay மூலம் விற்பனை செய்ய முடியும். இது அமேசான் போன்ற செயலி. இதில் நீங்கள் 500 முதல் 1000 டாலர் வரை லாபத்தை பெறலாம்.
 • இந்த தொழிலை பொறுத்தவரை உங்கள் இணையதளத்திற்கு எவ்வளவு வாடிக்கையாளர் வருகிறார்கள், பொருட்கள் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து லாபம் கிடைக்கும்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement