Festival Business Ideas in Tamil | Pongal Business Ideas in Tamil
பொங்கல் வந்துவிட்டது என்றால் அனைவருமே வரிசை வைக்க அனைத்து பொருட்களை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். எவ்வளவு கடைகள் இருந்தாலும் கூட்டம் மட்டும் குறைவே குறையாது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கும். ஆகவே அந்த சீசனில் மக்களுக்கு தேவையா தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
அப்படி என்ன தான் தொழில் செய்ய முடியும் என்று அனைவருமே கேட்போம். நிறைய உள்ளது அதனை பற்றி இந்த பதிவை முழுவதையும் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Season Business in Tamil:
மக்கள் அதிகம் வாங்கும் பொருள் என்றால் அது கரும்பு, வாழைப்பழம் தான். நீங்கள் கரும்பை கடையாக வைக்காமல் கிராமங்களுக்கு சென்று அங்கு வீட்டு வாசலில் நின்று கரும்பு விற்றால் அனைத்து கரும்புகளை விற்றுவிடும். ஏனென்றால் வீட்டு வாசலில் கரும்பு கிடைத்தால் கண்டிப்பாக அனைவருமே வாங்கி கொள்வார்கள். ஆகவே முதலில் ஒரு கடையை வைத்து நல்ல லாபத்தை பாருங்கள்.
ஒரு கட்டு கரும்பு 200 என்றால் நாம் மொத்தமாக 100 கட்டு கரும்பு மொத்தமாக வாங்கினால் 13,000 தான் வரும். நாம் ஒரு கட்டு கரும்பு 200 என்று விற்றால் நமக்கு 8,000 ரூபாய் லாபம் தானே. ஆகவே இன்றே தொடங்கி லாபம் பெருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்
Banana Business Ideas in Tamil:
கரும்புக்கு பிறகு மக்கள் அதிகமாக வாங்குவது வாழைப்பழம் தான், இதை யாருமே சீப்பு கணக்கில் வாங்குவது குறைவுதான் அனைவருமே தாறு கணக்கில் தான் வருவார்கள். நீங்கள் இந்த பொங்கல் நாளில் 2 நாட்கள் மட்டும் கடையை வைத்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்க முடியும். அதேபோல் பழம் அனைத்தும் பழுத்த நிலையில் இல்லாமல் ஓரளவு மட்டும் காயாக இருந்தால் நல்லது. ஏன்னென்றால் அனைவருமே பொங்கல் அன்று சாப்பிடமாட்டார்கள். ஒரு 5 நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள் அதனால் காய்களாக இருந்தால் நல்லது.
வாழைத்தோப்புக்கு சென்று 100 வாழை தாறு வாங்கினால் 20,000 கிடைக்கும், ஆனால் அதே நாம் மக்களிடம் 350 விற்றால் நமக்கு மொத்தமாக 35,000 ரூபாய் கிடைக்கும்.
பானை விற்பனை:
எவ்வளவு தான் காலங்கள் மாறினாலும் இது மட்டும் மாறவே மாறாது அது தான் மண் பானை பொங்கல்..! எத்தனை பித்தளை, சிலர் பாத்திரம் வாங்கினாலும் மண் பானையில் தான் இன்று வரை பொங்கல் வைக்கிறார்கள் மக்கள். ஆகவே அந்த கடையை துவங்கி நல்ல லாபம் பெறமுடியும்.
இந்த வருடம் இந்த தொழில்களை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |