எப்போதுமே லாபம் தரக்கூடிய தொழில் இதனை உடனடியாக ஆரம்பியுங்கள்..!

Advertisement

Fruit Jam Business Plan in Tamil 

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக அனைவருமே ஏதாவது ஒரு சுயத்தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதிலும் பெண்கள் கண்டிப்பாக ஒரு சுயதொழிலை செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதனால் தான் இன்றைய பதிவில் பெண்களுக்கு ஏற்ற ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் பழங்களை பயன்படுத்தி அனைவருக்குமே பிடித்த மிகவும் ருசியான ஜாம் தயாரிக்கும் தொழில் தான். இந்த ஜாம் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த ஜாம் தொழிலை எவ்வாறு ஆரம்பிப்பது என்று விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Fruit Jam Business in Tamil:

Homemade jam business in tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த உணவு பொருட்களில் ஒன்றான பழ ஜாமை நீங்கள் மிகவும் இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் அனைவருமே விரும்பி வாங்குவார்கள்.

அதனால் நீங்கள் கண்டிப்பாக இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். இந்த ஜாமை நீங்கள் குறிப்பிட்ட பழவகையை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

அப்படியில்லையென்றால் அனைத்து பழவகைகளையும் பயன்படுத்தியும் தயாரித்து விற்கலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த பழ ஜாம் தயாரிக்கும் தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பழங்கள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் Jam Packing Machine ஆகியவையே ஆகும்.

இந்த Jam Packing Machine-ன் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 15,000 ஆகும். இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Demand அதிகம் உள்ள இந்த தொழிலை மட்டும் செய்து பாருங்க நல்ல லாபம் கிடைக்கும்

மேலும் இந்த பழ ஜாமை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த தொழிலை செய்வதற்கு உங்களின் வீட்டில் சுத்தமான சிறிய இடம் இருந்தாலே போதுமானது.

தயாரிக்கும் முறை: 

 Fruit Jam Business in tamil

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள பழங்களை நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின்னர் அதன் உள்ள தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு அதனுடைய சதைப்பகுதியை மட்டும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> அரைத்து வைத்தால் மட்டும் போதும் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பழத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு ஜாம் பதம் வரும் வரை நன்கு கலந்துகொள்ளுங்கள். இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இறக்கி கொள்ளுங்கள்.

அது நன்கு சூடு ஆறிய பிறகு அதனை Jam Packing Machine-னை பயன்படுத்தி கண்ணாடி பாட்டில்களில் பேக்கிங் செய்துகொள்ளுங்கள். பின்னர் அதன் முடி மீது உங்கள் கம்பெனி பெயர் பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்துகொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> குறைந்த முதலீட்டில் பணம் சம்பாதிக்க உதவும் 5 எளிய வழிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

விற்பனை செய்யும் முறை: 

நீங்கள் பேக்கிங் செய்துவைத்துள்ள ஜாம்களை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்கலாம். கடைகளில் 500 கிராம் ஜாம் ரூபாய் 150 – 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் தோராயமாக ஒருநாளைக்கு இருபது 500 கிராம் ஜாம் பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 3000 – ரூபாய் 3600 வரை லாபம் பார்க்கலாம். இந்த ஜாம் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement