Homemade business in tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, இந்த தொழில் மிகவும் சுலபமாக இருக்கும். குறைந்த முதலீட்டில் அதிகமாக லாபம் பெறுவதற்கு இந்த தொழில் மிகவும் முக்கிய பங்கு வகுக்கிறது, அப்படி என்ன தொழிலாக இருக்கும்னு ஆர்வமாக இருக்கிறதா? அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சாப்பிட கூடிய ஒரு வகையான உணவு பொருள் தான். மேலும் இந்த தொழிலை பற்றிய விவரங்களை நம் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.
பெண்கள் இந்த தொழிலை செய்தால் தினமும் 2000 முதல் வருமானம் பெறலாம் |
கடலை வியாபாரம்:
இந்த வியாபாரமானது அதிக அளவில் வருமானத்தை தர கூடிய ஒரு மசாலா கடலை தயாரிப்பு தான், இந்த மசாலா கடலைகளை தயாரிப்பதற்கு எந்தவிதமான மெஷின்களும் தேவைப்படாது. இதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி, அதனை தயாரித்து பல இடங்களுக்கு விற்பனை செய்வதால் அதிகப்படியான லாபத்தை பெறலாம். அதுமட்டுமின்றி இந்த கடலையை தயாரித்து ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்த்து வரலாம்.
தேவையான இடவசதி மற்றும் முதலீடு:
இந்த கடலையை தயாரிப்பதற்கு உங்க வீட்டில் சிறியதாக ஒரு இடம் இருந்தாலே போதுமானது, பெரியதாக இடவசதிகள் எல்லாம் தேவைப்படாது. இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு 2000 ரூபாய் மட்டும்தான், ஆனால் இதற்கு கிடைக்க கூடிய வருமான மாதம் 60,000 வரை இலாபம் கிடைக்கும்.
மசாலா கடலை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
இந்த மசாலா கடலை தயாரிப்பதற்கு நிலக்கடலை தேவைப்படுகிறது , இவை இருந்தால் மட்டும்தான் மசாலா கடலையை தயாரிக்க முடியும். இந்த நிலக்கடலையானது மளிகை கடை மற்றும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் விவசாயிகளிடம் கூட வாங்கிக்கொள்ளலாம். இதனை முழுகடலையாக வாங்கினால் அதனுடைய ஓடுகளை நீக்க வேண்டியவை இருக்கும். ஓடுகள் நீக்கிய கடலையை வாங்குவதால் அதனை தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
கடலையை தயாரிப்பதற்கு உப்பு, அரிசிமாவு, கடலைமாவு, பெருங்காயத்தூள், கலர் பவுடர், மிளகாய்த்தூள் போன்றவை இந்த மசாலா கடலையை தயாரிப்பதற்கு தேவைப்படுகிறது. மசாலா கடலையை எப்படி தயாரிப்பது என்று தெரியாதவர்கள் youtube மூலம் கூட வீடியோவை பார்த்து சுலபமாக செய்யலாம்.
பேக்கிங் செய்யும் முறை:
இந்த மசாலா கடையை தயாரித்த பிறகு கவர் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்தால் போதும். அதில் 1 கிலோ, 2 கிலோ என்ற அளவில் அதனை பேக்கிங் செய்த்து அதற்கான விலையை மதிப்பிட வேண்டும். ஆன்லைனில் 1 kg கடலையின் விலை 469 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனுடைய பிராண்டுக்கு தகுந்தது போல் விலையும் மாறுபடுகிறது.
விற்பனை செய்யும் முறை:
இந்த கடலையை பேக்கிங் செய்த பிறகு ஆன்லைன், அருகில் இருக்கும் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், சிறிய சிறிய பொட்டி கடைகள் போன்ற கடைகளில் இந்த மசாலா கடலையை விற்பனை செய்து அதிகமான இலாபத்தையும் பெறலாம். மேலும் இந்த தொழிலை தொடங்கி இதில் அதிகமான இலாபத்தை பெறுவதற்கு வாழ்த்துக்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |