Chocolate Making Business at Home in Tamil
அனைவருக்குமே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுமட்டுமில்லாமல் இக்காலத்தில் சுயதொழில் செய்தால் மட்டுமே பண தேவையை நிறைவு செய்ய முடியும். அப்படி சுயதொழில் தொடங்கும் முன் முதலில் நல்ல தொழிலை தேர்வு செய்ய வேண்டும். அதாவது என்றுமே நிரந்தரமாக கை கொடுக்கும் தொழிலை தேர்வு செய்ய வேண்டும். அப்படி என்றுமே குறையாமல் கை நிறைய வருமானத்தை தரக்கூடிய தொழில் ஒன்று உள்ளது. அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சாக்லேட் தொழில் பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். சாக்லேட் எல்லா சீசனிலும் அதிகமாக விற்கப்படும் ஒன்று. எனவே இந்த தொழில் நிரந்தரமான தொழிலாக இருக்கும்.
How to Start Chocolate Making Business at Home in Tamil:
இத்தொழிலுக்கு தேவையான இடம்:
சாக்லேட் தயாரிப்பு தொழிலுக்கு பெரிய அளவிலான இடங்கள் தேவையில்லை. உங்கள் வீட்டில் உள்ள சமையலறை போதும் இத்தொழிலை தொடங்கலாம்.
தேவையான மூலப்பொருட்கள்:
- டார்க் சாக்லேட் பார்
- மில்க் சாக்லேட் பார்
- முந்திரி
- திராட்சை
- பாதாம்
- ஜாம்
- ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகள்
வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் |
தேவையான தயாரிப்பு பொருட்கள்:
- தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம்.
- சாக்லேட் கலவை செய்ய ஒரு பாத்திரம்
- சாக்லேட் வடிவமைப்புக்கான மோல்டுகள்
- பேக்கிங் கவர்
முதலீடு:
இந்த சாக்லேட் தொழிலை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 10,000 ருபாய் வரையிலும் முதலீடு தேவைப்படும்.
சாக்லேட் தயாரிக்கும் முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். டார்க் சாக்லேட் பார், ஒயிட் சாக்லேட் பார் இரண்டையும் கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பிறகு, ட்ரை ஃப்ரூட்ஸ்களையும் நறுக்கி வைத்து கொள்ளவும். இதற்கு பதிலாக பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இந்த பாத்திரத்தின் மேல், இதை விட பெரிய அளவிலான மற்றொரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.
மேல் உள்ள பாத்திரத்தில் நறுக்கி வைத்த சாக்லேட் பீஸ்களை எல்லாம் போட்டு கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்யும் போது அடுப்பு எரியும் அளவை ஒரே அளவில் வைக்க வேண்டும். ஒரே அளவில் வைத்தால் தான் மேலிருக்கும் பாத்திரத்திற்கு சூடானது சீராக கிடைக்கும்.
கீழ் இருக்கும் பாத்திரத்தை விட மேலிருக்கும் பாத்திரம் பெரிதாக இருந்தால் தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் விரைவாக உருகும்.
தூக்கி போடும் பொருளை வைத்து முதலீடே இல்லாமல் தினமும் கை நிறைய சம்பாதிக்கலாம். |
சாக்லேட் உருக ஆறமிக்கும் போது கரண்டியை வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் சாக்லேட் கட்டியாகிவிடும். அதுமட்டுமில்லாமல் கீழ் இருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் குறையும் போது மீண்டும் அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இந்த சாக்லேட் ஆனது உருகி தோசை மாவு பதத்திற்கு வரும்வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதை எடுத்து நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சாக்லேட் மோல்டுகளில் ஊற்ற வேண்டும்.
மோல்டு ட்ரேயில் உள்ள வடிவத்தில் கால் பாகம் அளவிற்கு மட்டுமே சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ஃ ப்ரூட்ஸ் அல்லது நட்ஸ் வகைகளை போட வேண்டும்.
நட்ஸ்களை போட்ட பிறகு அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும். அதாவது சாக்லேட் கலவைக்கு நடுவில் நட்ஸ்கள் இருக்குமாறு செய்து கொள்ளுங்கள்.
பிறகு இந்த மோல்டு ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் ஹோம்மேட் சாக்லேட் தயார்.!
அனைவருக்கும் பிடித்த இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் |
பேக்கிங் செய்யும் முறை:
இந்த சாக்லேட்டுகளை எடுத்து சரிகை பேப்பரில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
தேவையான ஆவணங்கள்:
இத்தொழில் உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI சான்றிதழ் கட்டாயமாக வேண்டும்.
ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் GST சான்றிதழ் வேண்டும்.
வருமானம்:
ஒரு கிலோ சாக்லேட் தோராயமாக 300 ரூபாய் வருமானம் என வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 5 கிலோ சாக்லேட் விற்பனை செய்தால் 1,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் 54,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |