பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

Housewife Home Business Ideas Tamil

பெண்களுக்கான 5 வேலை யோசனைகள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க..! | Housewife Home Business Ideas Tamil

குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனித்து கொள்ளும் பொறுப்பினால் வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்குப் செல்ல வேண்டும், வருமானம் ஈட்ட வேண்டும் என ஆர்வம் இருக்கும் பெண்கள், அம்மாக்களுக்கு ஏதாவதொரு சூழ்நிலைக் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் நல்ல தொழில் தொடங்கலாம். அப்படி என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வீட்டு பேக்கரி (Home Based Bakery):

Housewife Home Business Ideas Tamil:- இப்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை செலுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆகவே நீங்கள் நீங்கள் வீட்டில் இருந்தப்படிய்யே சத்தான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ், சுவிட்ஸ் போன்றவரை தயார் செய்து விற்பனை செய்யலாம். இவ்வாறு ஆரோக்கியமாக தயார் செய்த உணவு பொருட்களை உங்கள் ஊரில் உள்ள சிறிய கடைகள், பேக்கரி போன்ற இடங்களில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். நீங்கள் தயார் செய்த உணவு பொருள் மக்களுக்கு அதிகம் பிடிக்க ஆரம்பித்தது என்றால் உங்களது விற்பனையும் அதிகரிக்கும் அதேபோல். அதன் மூலம் அதிக வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்.

கோச்சிங் கிளாஸ் (Coaching Classes):

இரண்டாவதாக நாம் தெரிந்துகொள்ள போவது கோச்சிங் கிளாஸ். கோச்சிங் கிளாஸ் என்று சொன்ன உடனேயே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ஸ்கூல் பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக்கொடுப்பது என்றுதான் நினைப்போம். ஆனால் இதை விட கற்றுக்கொள்ள நினைக்கும் விஷயங்கள் நிறையவே இருக்குறது இந்த உலகத்தில். உதாரணத்திற்கு நடனம், மியூசிக், பாடல், ட்ராயிங், யோகா, பெயிண்டிங் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது இவற்றை தங்களுக்கு தனித்துவமாக எது தெரியுமோ அதனை மற்றவர்களுக்கு மாற்று கொடுக்கலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.

சமையல் கலை (Tiffin Service):

Housewife Home Business Ideas Tamil:- இன்று வீட்டுச் சாப்பிட்டிற்கு ஏங்குவோர் பலர் உள்ளனர். ஆன்லைனில் வீட்டுச் சுவையைத் தேடி தேடி சாப்பிடும் இளைஞர்கள்தான் அதிகம். நீங்கள் சமையலில் அசத்துபவர் என்றால் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்களில் பதிவு செய்து கொண்டு வீட்டிலேயே சமைத்து உணவுகளை ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். அதேபோல் ஆன்லைன் மூலம் தங்களுக்கு இந்த தொழிலை செய்ய தெரியாது என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் சமையல் செய்து விற்பனை செய்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் போதும். உங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

விர்ச்சுவல் அசிஸ்டென்ட் (Virtual assistant):

இந்த விர்ச்சுவல் அசிஸ்டென்ட் பொறுத்தவரை லாக் டவுனிக்கு முன்னாடியும் சரி, லாக் டவுனுக்கு பின்னாடியும் சரி நல்ல ட்ரெண்டிங் பிசினஸ் என்று சொல்லலாம். விர்ச்சுவல் அசிஸ்டென்ட் நிறைய நிறுவனத்தில் போன் அட்டேன் செய்ய ஆள் தேவை, அப்பாயிமென்ட் போடுறதுக்கு ஆள் தேவை, பீட் பேக் ரிஸீவ் செய்ய ஆள் தேவை என்று இது மாதிரி நிறைய தேவைகள் இருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே அலுவகத்தில் பணியமர்த்த முடியாது. அப்போ நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு முக்கியமான தேவை எதுவென்றால் உங்களுக்கு Phone cell-யில் நன்றாக மற்றவர்களிடம் பேச தெரிந்திருக்க வேண்டும். ஆகவே உங்களுக்கு பேச்சு திறமை நன்றாக இருந்தால் வீட்டில் இருந்தபடியே இந்தனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.

வலைப்பதிவு (Blog):

Housewife Home Business Ideas Tamil:- எழுத்து ஆர்வம் இருப்போர் இதை முயற்சிக்கலாம். யூடியூப் போலவே உங்களுக்கு பிடித்த விஷயங்களை, மக்களுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் வகையில் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். லைஃப்ஸ்டைல், ஹெல்த், சமையல் , டெக்னாலஜி தகவல்கள் இப்படி எதுவாக இருந்தாலும் தயங்காமல் துவங்கலாம். இதற்கு தற்போது இலவசமாகவே கூகுள் word press, blogger, weebly, wix என பல சேவைகள் இலவசமாக வலைப்பதிவு தொடங்க உதவுகின்றன. அதில் சென்று விருப்பம் போல் உங்கள் வலைப்பதிவை அமைத்துக்கொள்ளலாம்.

லட்சத்தில் லாபத்தை அள்ளி தரும் இரும்பு சார்ந்த தொழில்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Siru Tholil Ideas in Tamil 2022