Kozhi Pannai Business Plan in Tamil
கோழிவளர்ப்பு தொழிலானது ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு அருமையான சுயதொழி ஆகும். முதலீடு செய்த கொஞ்ச நாளிலையே நல்ல வருமானம் ஈட்டலாம். கோழிகளை முட்டை மற்றும் இறைச்சி போன்ற தேவைகளுக்கு வளர்த்து அதிக இலாபம் ஈட்டலாம். மட்டன் இறைச்சியைக் காட்டிலும், சிக்கன் ஐட்டங்களுக்கு நல்ல வரவேற்பும் தேவையும் இருக்கின்றது.
நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது முட்டை கோழிவளர்ப்பு தொழிலை பற்றித்தான்!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முட்டை கோழிகள் வளர்ப்பு முறை:
முட்டை கோழிகளை கூண்டு அமைத்துதான் வளர்க்க வேண்டும். கோழிப்பண்ணை அமைக்க வங்கிகள் கடன் கொடுத்தும் உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் கோழி குஞ்சுகளாக இருக்கும் முதல் அது வளரும் பருவம் அடையும் வரை உற்பத்தி செலவுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும். பிறகு கோழிகள் முட்டை இடும் பருவம் வந்ததும் கோழிகள் இடுகின்ற முட்டைகளை விற்று அடுத்து அடுத்து வரும் உற்பத்தி செலவுகளை எளிதாக பார்த்துக் கொள்ளலாம். ஒரு கோழியானது வாரத்தில் 6 முட்டைகளை இடுகின்றன. எனவே தினசரி வருமானம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டேதான் இருக்கும்.
இதையும் படியுங்கள்=>இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!
ஒரு கோழியானது அது குஞ்சாக இருக்கும் முதல் அது முட்டை இடும் பருவம் வரை மூன்று பருவங்களாக பிரிக்கபடுகிறது.
கோழி குஞ்சுகள் அது பொரித்த நாளில் இருந்து முதல் 8 வாரங்கள் குஞ்சு பருவம் எனப்படும்.
அதற்கடுத்த 8 வாரங்கள் வளரும் பருவம்.
அடுத்து 56 வாரங்கள் முட்டை இடும் பருவத்தை அடைகின்றன.
முக்கியமாக மூன்று பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும்.
கூண்டுகளில் கோழிகளுக்கு பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் போன்ற வசதிகள் சரியாக இருக்குமாறு கோழிகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு 7 அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை கோழிகளின் அலகுகளை வெட்ட வேண்டும்.
இதையும் படியுங்கள்=>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!
கோழிக்குஞ்சானது தன் குஞ்சு பருவத்தில் 600 கிராம் எடை அளவில் இருக்கும். அது வளரும் பருவத்தில் 1100 கிராம் எடையினை அடைகின்றன. அக்கோழிகளை முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை இடும்.
ஒரு கோழியானது வாரத்திற்க்கு 6 முட்டைகளை இடும். அம்முட்டைகளை அன்றன்றே விற்பனைக்கு அனுப்பி விட வேண்டும்.
ஒவ்வொரு கோழியும் அது வளர்ந்த 17-வது வாரத்தில் இருந்து 72-வது வாரம் வரை முட்டைகளை இடுகின்றன.
கோழியின் முட்டை இடும் பருவமான 55 வாரங்களில் அதாவது 385 நாட்களில் 320 முட்டைகளை இடுகின்றன.
இதையும் படியுங்கள்=> டாப் 10 சிறு தொழில்கள்
லாபம்:
ஒரு கோழியானது வாரத்திற்க்கு 6 முட்டைகளை இடும். நாம் இந்த முட்டையினை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்து இலாபத்தினை பெறலாம்.
ஒரு நாளைக்கி 200 முட்டைகளை விற்பனை செய்தோம் என்றால் அன்று 1200 ரூபாய் இலாபத்தினை பெறலாம்.
ஒரு மாதத்திற்கு 6000 முட்டைகளை விற்பனை செய்தோம் என்றால் மாதம் ரூபாய் 36,000 வரை இலாபத்தினை பெற முடியும்.
நீங்கள் வளர்க்கும் கோழிகளின் முட்டை விற்பனை மட்டுமன்று வயதான முட்டை கோழி விற்பனை, எரு விற்பனை போன்ற பல வருமானங்களையும் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |