தினசரி சம்பாதிக்கும் தொழில்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தினசரி வருமானம் தரும் தொழிலை பற்றி தான் காணப்போகிறோம். சில நபர்கள் வீட்டில் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டாம் வீட்டில் இருந்துகொண்டே ஏதாவது வேலை இருந்தால் செய் என்று சொல்வார்கள். அவர்களுக்காகவே தினமும் புதிது புதிதாய் சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான தொழிலை பற்றி காண்போம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் தினமும் 1 மணி நேரம் செலவிட்டால் 1,000 ரூபாய் சம்பாதிக்கலாம் சூப்பர் தொழில்
மதிய உணவு வியாபாரம் செய்வது எப்படி.?
- உங்களுக்கு நல்லா சமைக்க தெரிந்தால் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம். அதுவும் ஒரு நேரம் மட்டும் செய்தால் போதும். மதியம் ஒரு 2 மணி நேரம் செலவிட்டால் போதும். நல்ல வருமானத்தை ஈட்டலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
- உதாரணமாக மதிய உணவுகு தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் போன்ற சாதம் வகைகள் செய்யலாம். மற்றும் சாதம், சாம்பார் வறுவல் ஒரு கூட்டு, ரசம், மோர் போன்றவற்றை செய்யலாம்.
- நீங்கள் கிராமத்தில் இருப்பவர்களாக இருந்தால் வயல்களில் வேலை பார்ப்பவர்கள் வாங்கி செல்வார்கள். அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும். நான் மதிய உணவு சமைத்து கொடுக்கிறேன் என்று சொன்னால் தான் பிரபலம் ஆகும்.
- வயல்களில் தினமும் வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு உணவு ஹோட்டலில் இருந்து தான் வாங்குவார்கள். அதுவே நம்ம ஊரிலே கிடைத்தால் ஈஸியா இருக்கும் என்று நினைப்பார்கள். அதனால் இந்த தொழிலை செய்தால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
- உதாரணமாக சாப்பாடு என்றால் 1 சாப்பாடு 50 ரூபாய் அதுவே 10 சாப்பாடு வாங்குகிறார்கள் என்றால் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
- தயிர் சாதம், லெமன் சாதம் இது போன்ற 1 சாதம் 30 ரூபாய் என்றால் 20 சாப்பாடு என்றால் 600 ரூபாய் சம்பாதிக்கலாம்.
- தினமும் குறைந்தபட்சம் வைத்தாலே 1,500 ரூபாய் தாராளமாக சம்பாதிக்கலாம்.
- நீங்கள் வாங்கும் பொருட்களை மொத்தமாக வாங்கி கொள்ள வேண்டும். அரிசி எல்லாம் whole sale கடையில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். அது போன்று மளிகை பொருட்களும் மொத்தமாக வாங்கி கொள்ளவும்.
- பொருட்களை மொத்தமாக வாங்கும் போது லாபமானதாக இருக்கும். உணவு தொழிலை செய்தால் எந்நாளிலும் நஷ்டமாகாது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |