பெண்களுக்கான தொழில் | Mehandi Cone Making Business in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபார பதிவில் ஒரு அற்புதமான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள் இந்த தொழில் செய்து வந்தால் அதிகமான வருமானத்தை பெறலாம. வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பார்ட்டைமாக செய்யலாம். மேலும் அவை என்ன தொழில் என்றும் அவற்றை தொடங்க தேவைப்படும் முதலீடுகள் என்னவென்றும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளவோம் வாங்க.
How to Start Your Own Mehndi Business: பெண்களுக்கான தொழில்களில் Mehandi பிசினெஸ் ஒன்று. பெண்கள் அதிகமாக விரும்பி வாங்கும் பொருளை வைத்தே நீங்கள் அதிக அளவில் சம்பாதிக்கலாம். அதிலும், ஒரு பெண்ணின் மனம் ஒரு பெண்ணிற்கு தான் தெரியும் என்று கூறுவர்கள். அதேபோல், இதன் தேவை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று ஒவ்வொரு பெண்ணிற்கு தெரியும். ஆகையால், இது பெண்களுக்கான சிறந்த தொழில் என்றே கூறலாம்.
சிறிய இடம் இருந்தாலே போதும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். |
Mehandi Cone Making Business in Tamil:
இன்றைய பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால், பெண்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் மெஹந்தி கோன் தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக பெண்கள் எல்லா விதமான பண்டிகைகள் மற்றும் திருமணம் போன்றவற்றிக்கு மெஹந்திகளை அதிகமாக பயன்படுத்துவார்கள், இதை பெண்கள் அதிகமாக விரும்புவதை விட சிறிய குழந்தைகள் அதிகமாக விரும்புகின்றனர். மேலும் இதனுடைய தேவைகள் என்றும் அழியாது என்பதால் இந்த தொழிலை தொடங்கி அதிகமான லாபத்தை பெறலாம்.
தேவைப்படும் மூலப்பொருள்கள்:
இந்த மெஹந்தி கோன்களை தயாரிப்பதற்கு Henna Powder, Wrapping Covers, Cellotape, Mixing and Filling Machine. இதில் இருக்கும் ஹென்னா பவுடரை நீங்களே வீட்டில் செய்யலாம். அதற்கு மருதாணி இலைகள் இருந்தால் மட்டும் போதும். உங்களால் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் Henna பவுடரை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக நாம் செய்யும் மெஹந்தி கோன்களை பேக்கிங் செய்வதற்கு Wrapping Covers, Cellotape தேவைப்படுகிறது. இவை இரண்டையும் நீங்கள் நேரடியாகவே வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக கூட வாங்கிக்கொள்ளலாம்.
Mehndi Mixing Machine in Tamil:
ஹென்னா பவுடர்களை கலப்பதற்கு தேவைப்படும் மெஷின் தான் மிக்ஸிங் மெஷின் ஆகும். இதனைடைய ஆரம்ப விலை 4,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாய் வரையும் இருக்கிறது. இதனை நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஆப் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
மெஹந்தி செய்வது எப்படி.?
மெஹந்தி கோன்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருள் ஹென்னா பவுடர், காபி பவுடர், எலுமிச்சை, கிராம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த மிக்ஸிங் மெஷினில் சேர்த்தால் போதும், அதுவே உங்களுக்கு சரியான முறையில் அரைத்து கொடுத்து விடும்.
அடுத்ததாக நீங்கள் தயாரித்த கோன்களை Filling Machine கொண்டு நிரப்பலாம் அல்லது உங்களுக்கு இந்த மெஷின் வாங்க முடியவில்லை என்றால், ஸ்பூன்களை கொண்டும் கோன் Wrapping Covers-யில் நிரப்பலாம்.
வீட்டில் இருந்தபடியே பார்ட்டைம் பிஸ்னஸ் தினமும் 5, 000 ரூபாய் வரையும் வருமானம் |
தேவைப்படும் முதலீடு மற்றும் விற்பனை செய்யும் முறை:
தோராயமாக இந்த மெஹந்தி கோன்களை தயாரிப்பதற்கு நாம் வாங்கும் 1kg ஹென்னா பவுடரின் விலை 80 ரூபாய் ஆகும். இந்த 1 kg -யில் 120 பீஸ் தயாரிக்கலாம். அடுத்ததாக நாம் பேக்கிங் செய்வதற்கு வாங்கும் கவர்கள் போன்றவற்றிக்கு மொத்தமாக தேவைப்படும் முதலீடு 200 ரூபாய் மட்டும் தான் தேவைப்படும்.
இந்த கோன்களை சில்லறை விற்பனையாக செய்யும் பொழுது நீங்கள் 10 அல்லது 20 ரூபாய் வரையும் வைத்து விற்பனை செய்யலாம். மேலும் நீங்கள் இந்த மெஹந்திகளை நீங்கள் 50 kg க்கு மேல் தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் பொழுது, வாரத்திற்கு 20,000 ரூபாய் வரையும் கிடைக்கும். வாரத்திற்கு மட்டுமே 20,000 ரூபாய் என்றால் மாதத்திற்கு 80,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம்.
மெஹந்திகளை தயாரித்த பிறகு எங்கு விற்பனை செய்தால் அதிகமான லாபம் கிடைக்கும் என்றால் சூப்பர் மார்க்கெட், Fancy stores, லோக்கல் ஷாப், Direct selling மேலும் ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்யலாம்.
மேலும் இந்த பிஸ்னஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த பிஸ்னஸ் செய்து அதிகமான லாபத்தை பெறலாம்.
ரிபேக்கிங் பிசினஸ் வாங்கும் விலை 100 ரூபாய் விற்கும் விலை 500 ரூபாய்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |