காளான் தொழில் | Mushroom Business in Tamil
தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்கையில் நாமும் முன்னேற வேண்டும் என்று இந்த உலகில் பல இளைஞர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு விதமான துறையை பற்றிய திறமை இருக்கும். எந்த துறையை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியுமோ அந்த துறையில் தொழிலை தொடங்கினால் நிச்சயம் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க முடியும். அந்த வகையில் இந்த பதிவில் காளான் தொழிலில் எப்படி லாபத்தை பெற முடியும் மற்றும் காளான் தொழில் ஆரம்பிப்பதற்கு தேவையான தகவல்களை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்:
- காளானில் நிறைய வகைகள் உள்ளது, அதில் குறிப்பாக சொல்ல போனால் Button Mushroom நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் கடைகளில் பார்த்தால் தெரியும் டின்களில், டப்பாகளில் விற்பனையாகும் காளான்கள் பெரும்பான்மையானது இந்த Button Mushroom தான்.
- இப்போதும் மக்கள் வாங்கும் காளான்களில் Button Mushroom முதலிடம் வகுத்துள்ளது என்றே சொல்லலாம்.
- சைவ பிரியர்களுக்கு இந்த காளான் வகை அதிகம் பிடித்துள்ளது. கொலஸ்ட்ரால் இல்லாத உணவு எது என்று கேட்டால் அது நிச்சயம் காளான் தான்.
- இதில் இருக்கும் வைட்டமின் b உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது, அதனால் உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும் நபர்கள் காளான்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வகைகள்:
- Oyster
- Crema
- Porcini
Mushroom Business Plan in Tamil:
- காளாண் வளர்ப்பை நீங்கள் குடிசையில் ஆரம்பிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் காளானின் வெப்பநிலை 20 – 28 Degree இருக்க வேண்டும், இந்த வெப்பநிலையை மெயின்டைன் செய்வதற்காக குடிலில் ஆரம்பிப்பது நல்லது.
- இந்த தொழிலை செய்வதற்கு விதைகள் மிகவும் முக்கியம். இந்த விதைகளை எங்கு விதைக்க போகிறிர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த விதையை விதைத்து விட்டு அதன் மேல் வைக்கோல் பின் அதற்கு மேல் விதைகள் அதற்கு மேல் வைக்கோல் என மொத்தம் 8 லேயர் உருவாக்கி 25 நாட்கள் Preserve பண்ண வேண்டும்.
- 25-வது நாள் Fungus Form ஆகும். அதற்கு Spawning என்று பெயர். பின் இதை பிரித்து Casing Soil-ல் கம்போஸ்ட் செய்தால் நிறைய காளான்கள் உற்பத்தியாகும். இந்த விதைகள், Casing Soil கடைகளில் விற்பனையாகிறது அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அறுவடை செய்யும் காலம்:
- 50 – 60 நாட்களில் மொட்டுக்கள் வளர ஆரம்பித்து விடும்.
- காளான் வளர்ந்ததும் அதன் தலையை மட்டும் Twist செய்து எடுக்க வேண்டும்.
- மண்ணை தோண்டி காளான்களை வெளியே எடுக்க கூடாது.
- காளானை KMS Solution பயன்படுத்தி சுத்தபடுத்தி கொள்ளவும். பின்னர் இதை Polythene Bag அல்லது டப்பாகளில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம்.
லாபம்:
- வருமானம் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறீர்களோ அதை பொறுத்து அமையும்.
- 2 kg காளான் உற்பத்தி செய்து நாம் 1 bag முழுவதுமாக நிரப்பலாம். அப்போது உங்களுக்கு லாபம் Rs.30,000 வரை கிடைக்கும்.
- இந்த தொழிலை செய்வதற்கு பெரிய இடவசதி தேவை இல்லை சிறிய இடம் இருந்தாலே நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம். இதை நீங்கள் ஏற்றுமதி செய்தும் சம்பாதிக்க முடியும்.
காளான் வளர்ப்பு அதிக மகசூல் பெற சில டிப்ஸ் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |