குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில். மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

அதிக வருமானம் தரும் தொழில்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய வியாபாரம் பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த தொழிலை அனைவருமே செய்யலாம். இந்த தொழிலை யார் செய்தாலும் அதிக வருமானத்தை தரக்கூடிய ஒரு சிறந்த தொழில் ஆகும்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்த தொழிலை செய்யலாம். அப்படி என்ன தொழில் அதை எப்படி செய்வது என்பதை பற்றியெல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்:

இந்த தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு தேவைப்படும் முதலீடு என்று பார்த்தால் வெறும் 5000 ரூபாய் மட்டும் தான். ஆனால் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடிய ஒரு சிறந்த தொழில் ஆகும்.

Toronto Potato or Twisted Potato Business in Tamil:

இன்றைய பதிவில் என்ன தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம் என்றால் மிகவும் எளிமையான தொழில் அது என்ன தொழில் என்றால்Tornado Potato Business பற்றி தான். இந்த தொழில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்த தொழில் இப்பொழுது தான் வளர்ந்து வருகின்றது. அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டும் தான் உள்ளது. அதனால் இந்த தொழிலை உங்கள் ஊரில் இந்த தொழிலை நீங்கள் செய்தால் உங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழில் ஆகும்.

இந்த தொழிலை தொடங்குவது எப்படி..?

முதலில் இந்த தொழில் தொடங்குவது எப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலை பெரிய கடையாக அல்லது சிறிய தள்ளுவண்டி கடையாகவும் வைக்கலாம். இதற்காக முதலில் நீங்கள் ஸ்பைரல் ட்விஸ்ட்டர் (Spiral Twister) எனப்படும் மிஷின் வாங்க வேண்டும். இந்த மிஷினின் விலை 1200 ரூபாய் தான்.

இந்த மிஷினில்  உருளைக்கிழங்கு ஸ்பைரல் ட்விஸ்ட்டர் செய்வதற்கு நீளமான உருளைக்கிழங்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு நீங்கள் வாங்கிய நீளமான உருளைக்கிழங்குகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு  பிறகு அதனை ஒரு குச்சியில் சொருகிய பின்னர் அந்த ஸ்பைரல் ட்விஸ்ட்டர் (Spiral Twister) மிஷினில் மாட்டிவிட்டு நீங்கள் சுற்ற வேண்டும். நீங்கள் மிஷினில் சுற்றிய பிறகு  உருளைக்கிழங்கை ஸ்பைரல் போல நறுக்கி விடும்.

பின்னர் அதனை எடுத்து ஒரு கடாயில்  போட்டு பொரித்து அந்த உருளைக்கிழங்கை வெளியில் எடுத்து அதன் மீது பலவிதமான மசாலாக்களை தூவி விற்கலாம். முக்கியமாக பொறித்த அந்த உருளைக்கிழங்கின் மீது பல சுவையுள்ள மசாலாக்களை தூவினால் மக்கள் உங்கள் கடையை தேடி வருவார்கள்.

அடுத்து மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கடை எங்கு வைக்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் கடையாக அல்லது சிறிய தள்ளுவண்டி கடையாகவும் வைக்கலாம். முக்கியமாக கூட்டம் அதிகம் வரக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக ஒரு பெரிய கடைக்கு வாசலிலோ அல்லது பேருந்து அருகிலோ வைப்பதால் உங்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும்.

இப்படி இந்த தொழிலை செய்வதன் மூலம் உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அதுக்கு நீங்கள் கடையை எங்கு போடுகிறீர்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

அதிகமான டிமாண்ட் உள்ள தொழில் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். மாதம் 90, 000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022

 

Advertisement