வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

Updated On: March 21, 2022 11:42 AM
Follow Us:
தயாரிப்பு தொழில்
---Advertisement---
Advertisement

தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

நான் ஓவன் என்னும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள்,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. தமிழகத்தில் குறிப்பாக பிளாஸ்ட்டிக் கவர் பயன்படுத்த கூடாது என்று  தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நான் ஓவன் மூலம் பேக் தயார் செய்து விற்பனை செய்தால் நிச்சயம் நல்ல இலாபத்தை பெறமுடியும்.

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

 

சரி வாங்க இந்த நான் ஓவன் பேக் தயாரிப்பு தொழில் பற்றிய சில ஆலோசனைகளை இந்த பதிவில் நாம் படித்தறிவோம்

தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

கட்டிட அமைப்பு:

இந்த நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு தொழில் (non woven bags business plan) செய்வதற்கு பத்துக்கு, பத்து அளவு கொண்ட சிறிய அறை இருந்தால் போதும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த நான் ஓவன் பேக்ஸ் (non woven bags business plan) தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நான் ஓவன் பேப்ரிக் ரோல் (non woven fabric rolls) ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். இந்த நான் ஓவன் மெட்டீரியல் ஆன்லைனில்  www.indiamart.com, www.alibaba.com, www.amazon.com போன்ற வெப்சைட்டில் குறைந்த விலையில் கிடைக்கின்றது, அவற்றை நீங்கள் ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

தேவைப்படும் இயந்திரங்கள்:

  • Ultrasonic Sewing Machine
  • Ear Welding Machine
  • Tape Cutting Machine
  • Round Knife Cutting Machine
  • இந்த அனைத்து இயந்திரங்களும் www.indiamart.com, www.alibaba.com, www.amazon.com போன்ற வெப்சைட்டில் குறைந்த விலையில் கிடைக்கின்றது, அவற்றை நீங்கள் ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.
சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

 

இந்த தொழிலை தொடங்க நினைப்பவர்கள் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வாங்குவதே சிறந்தது. இந்த மிஷின் ரூ 31 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

இந்த மிஷினை வாங்குவதற்கு 70 சதவீதம் வரை வங்கிக் கடன் கிடைக்கிறது. மானியமாக 25 சதவீதம் மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது.

முதலீடு:

முதலீடு செய்வோரிடம் 5 சதவீத பணம் இருந்தாலே போதுமானது. அதாவது குறைந்தபட்சம் ரூபாய் 4,00,000/- இருந்தால் போதும்.

தயாரிப்பு தொழில் விவரம்:

இந்த நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு தொழில் (non woven bags business plan) பொறுத்தவரை ஒரு சிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேக்ஸ் மற்றும் பல பொருட்களை நிறைய மாடல்களில் தயாரித்தால் ஆர்டர்கள் குவியும்.

பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

சந்தை வாய்ப்பு:-

இந்த நான் ஓவனை (non woven bags business plan) பயன்படுத்தி கேரிபேக், தாம்பூலப்பை, தலையணை உறை, சீட் கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், கிளவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயார் செய்து அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பலவகையான டிசைன்கள் பலவண்ணங்களில் தயாரித்து தருவதன் மூலம் நல்ல லாபத்தை இந்த தொழிலில் நாம் பெற முடியும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2022 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil