மெழுகுவர்த்தி தொழில் செய்வது எப்படி ???
மெழுகுவர்த்தி தயாரிப்பு:- மெழுகுவர்த்தி தொழில் மிகவும் பழமையான தொழில் என்றாலும் இன்று வரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உகந்தது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தாலே போதும். தினமும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 5 கிலோ முதல் அதிகபட்சம் 25 கிலோ வரை மெழுகு வர்த்தியை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது. சரி வாங்க மெழுகுவர்த்தி தயாரித்து எப்படி விற்பனை செய்யலாம் இன்று இவற்றில் நாம் காண்போம்..!
இதையும் படிக்கவும் | பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..! |
தேவைப்படும் இயந்திரங்கள்:
- இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
- செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
- செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.
மெழுகுவர்த்தி தொழில் – அரசு வழங்கும் மானியம்:
- பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும்.
- கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை.
மெழுகுவர்த்தி செய்முறை – தேவைப்படும் பொருட்கள்:
- பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு,
- காட்டன் நூல்,
- அச்சு,
- அலுமினிய டிரே,
- மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை,
- கட் செய்ய சிறிய கத்தி,
- மெழுகு உருக்க அடுப்பு,
- அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய்,
- கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல்,
- தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட்,
- பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.
மெழுகுவர்த்தி தொழில் செய்வது எப்படி – மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை:
- மெழுகுவர்த்தி செய்முறை பொறுத்தவரை கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும்.
- அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும்.
- பின்பு சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும்.
- 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும்.
- சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.
- மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
- அதேபோல் வெள்ளை நிறம் மட்டுமல்லாமல், எந்த நிறத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்களுக்கு என்ன வண்ணம் தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு கலர் கெமிக்கல்களை பயன்படுத்த வேண்டும்.
மெழுகுவர்த்தி தயாரிப்பு – ரகங்கள்:
இந்த மெழுகுவர்த்தி தொழில் செய்ய லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.
மெழுகுவர்த்தி தொழில் – முதலீடு:
1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.
மெழுகுவர்த்தி தொழில் சந்தை வாய்ப்பு:
உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.
மெழுகுவர்த்தி தொழில் வருமானம்:
- ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம்.
- பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது.
- திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு.
- ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது.
- பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.
இதையும் படிக்கவும் | வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..? |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |