பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு தொழில் செய்ய வெறும் 10,000/- முதலீடு போதும்.. தினமும் நல்ல லாபம் பெறலாம்..!
Pakku Mattai Plate Manufacturing in Tamil
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் வணக்கம். நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் பலவகையான தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு தொழில் பற்றி தான். பாக்கு மட்டை தட்டிற்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. ஆக இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் இந்த தொழிலுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் 10,000 ரூபாயை முதலீடு செய்து, பின்பு அரசு தரும் மானியத்தின் மூலமும், வங்கி வழங்கும் கடன் மூலமும் உங்கள் தொழிலை ஆரம்பிக்க முடியும். சரி வாங்க இந்த தொழில் குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
இந்த தொழிலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
இந்த தொழில் தொடங்குவதற்கான பாக்கு மட்டைகள் உங்களுக்கு வருடம் முழுவதும் உங்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். ஆக தமிழ் நாட்டில் இந்த பாக்கு மட்டை சேலம் மற்றும் சில மாவட்டங்களில் கிடைக்கிறது. மேலும் கர்நாடக மற்றும் கேரளாவில் இந்த பாக்கு மட்டை கிடைக்கின்றது.
பிறகு இந்த தொழிலை நன்றாக மார்க்கெட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
முதலீட்டை பற்றி கவலைப்பட தேவை இல்லை. ஏனென்றால் இந்த தொழிலுக்கு அரசு மானியம் வழங்குகிறது அதேபோல், வங்கிகளும் கடன் வழங்குகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை.! உங்களை தேடி வருவாங்க
எவ்வளவு முதலீடு தேவைப்படும்:
இந்த பாக்கு மட்டை தொழில் தொடங்க உங்களுக்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
இடம் அமைப்பு:
உங்கள் வீட்டில் 600 சதுர அடி முதல் 800 சதுர அடி இருந்தாலே போதும் இந்த தொழிலை மிக எளிதாக தொடங்கிவிடலாம். உங்கள் வீட்டில் இடம் இல்லாத பட்சத்தில் தனியாக இடம் அமைத்து இந்த தொழிலை தொடங்கலாம்.
மூலப்பொருட்கள்:
பாக்கு மட்டை தான் இந்த தொழிலுக்கு மிக முக்கியமான மூலப்பொருள் ஆகும். பிறகு பாக்கு மட்டைகளை ஊறவைக்க ஒரு நாளுக்கு 20 குடம் தண்ணீர் தேவைப்படும்.
பாக்கு மட்டை தட்டு எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்:
ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் முக்கால் அளவு ஊற்றி, அதில் பாக்கு மட்டைகளை 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து தொட்டியில் இருந்து பாக்கு மட்டைகளை எடுத்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் நிக்க வைக்க வேண்டும். இப்படி பாக்கு மட்டைகளை நிக்க வைக்கும் போது, பாக்குமட்டையில் உள்ள தண்ணீர் அனைத்தும் வடிந்து பாக்கு மட்டை தட்டு தயார் செய்வதற்க்கான பக்குவத்தில் மட்டைகள் வந்திருக்கும்.
பிறகு அந்த மட்டைகளை இயந்திரத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்கினால் 20 வினாடிகள் இயந்திரத்தில் பாக்கு மட்டை இருந்தால் போதும். பாக்கு மட்டை தட்டு தயார் ஆகிவிடும். ஒரு யூனிட்டில் நீங்கள் 6 தட்டுகளை தயார் செய்ய முடியும்.
பாக்கு மட்டை தட்டின் சைஸ்:
12 இன்ச், 10 இன்ச், 8 இன்ச, 4 இன்ச், 5.5 இன்ச் என்று வட்டம் மற்றும் சதுரம் வடிவில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கப்படுகிறது. இது தவிர ஸ்பூன், டம்ளர், 3 குழி உள்ள தட்டு, இரண்டு குழி உள்ள தட்டு, பிரியாணி பார்சல் பாக்ஸ் என்று பாக்கு மட்டையில் நிறைய பொருட்கள் தயாரிக்கப்டுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆள் இல்லாமலும் தொழில் செய்து தினமும் 3,000 ரூபாய் வரை லாபம் பெறலாம்..!
பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரம்:
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |