Recycling Business India
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவில் நிறைய யோசனைகளை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வதற்கான அருமையான யோசனையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். காகித மறுசுழற்சி தொழிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். காகிதம் தேவை எப்பொழுதுமே இருக்கும்.
காகிதத்தின் அடிப்படையில் செய்தித்தாள்கள், புத்தகங்கள், உரை நகல், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், பத்திரிகை தாள்கள், காலெண்டர்கள் போன்றவை எப்பொழுதுமே காகிதத்தின் தேவையில் இருக்கின்றது. தேவைகள் அதிகம் இருப்பதால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். வாங்க இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள், இடம், முதலீடு போன்ற தகவல்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Paper Recycling Business in India:
காகிதம் மரங்களிலுருந்து தயாரிக்கப்படுகிறது. 12 மரங்கள் 1 டன் காகிதத்தை தருகின்றது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மரங்களை அழித்து வருகிறோம். இந்த நிலையை தவிர்ப்பதற்காக தான் காகிதத்தை மறுசுழற்சி செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர். காகித்தின் மறு சுழற்சி நன்மை என்னவென்றால் மரங்களை காப்பாற்றுவது மட்டுமில்லாமல், காகித கழிவுகளை குறைக்கவும் பயன்படுகிறது.
மூலப்பொருட்கள்:
Paper Shredder Machine, வேஸ்ட் பேப்பர் போன்றவை மூலபொருட்களாக தேவைப்படும். இந்த மெஷினை ஆன்லைன் மூலமாக வாங்கி கொள்ளலாம்.
முதலீடு:
மெஷினின் விலை 25,000 ரூபாய், Raw Material வாங்குவதற்கு 20,000 ரூபாய் மற்றும் இடத்தின் வாடகையை பொறுத்து மாறுபடும். கரண்ட் பில், ஆட்கள் கூலி என மொத்தம் செலவு 76,000 ரூபாய் தேவைப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழிலுக்கு முதலீடு தேவையில்லை ஆனால் தினமும் 8000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
இடம்:
500 சதுர அடி முதல் 1000 சதுர அடி இடம் இருக்க வேண்டும். முக்கியமாக கரண்ட் Connection இருக்க வேண்டும்.
தயாரிக்கும் முறை:
Paper Shredder Machine -யில் உள்ளே நீங்கள் வேஸ்ட் பேப்பரை போட்டால் அதுவே பேப்பரை பீஸ் பீஸாக கொடுத்துவிடும்.
விற்பனை:
பழக்கடை, காய்கறி கடை, பேன்சி ஸ்டோர், கிப்ட் பேக் செய்யும் இடம் போன்றவற்றில் கொடுத்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
வேஸ்ட் பேப்பர் ஒரு கிலோ 7 ரூபாய், வேஸ்ட் பேப்பரிலுருந்து தயாரித்ததை 1 கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கு 200 கிலோ பேப்பர் தயாரித்தால் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம். அப்போ மாதா மாதம் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
Raw Materials, இடத்தின் வாடகை, ஆட்கள் சம்பளம், கரண்ட் பில் போன்றவற்றிற்கு மாதம் 51,000 ரூபாய் தேவைப்படும். வருமானத்திலிருந்து சம்பளத்தை கழித்தால் 99,000 ரூபாய் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ புதிய வருடத்தில் நல்ல தொழிலை செய்து முன்னேறுவதற்கு என்றும் முதலிடத்தில் உள்ள இந்த தொழிலை செய்தால் போதும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |