லாபம் தரும் தொழில்
பொதுவாக ஆண், பெண் யாராக இருந்தாலும் கடையில் ஒரு பொருளை வாங்கும் போது இந்த தொழிலை நாம் ஏன் செய்யக்கூடாது என்று யோசிக்கக்கூடிய ஒரு எண்ணம் வரும். சரி நாம் யோசித்த அந்த தொழிலை தொடங்கலாம் என்று நினைக்கும் போது அதற்கான முதலீடு என்ன மூலப்பொருட்கள் என்ன என்று தெரியாமல் அப்படியே விட்டு விடுவார்கள். ஆகையால் நீங்கள் கடையில் பணம் கொடுத்து வாங்கும் ஒரு பொருளை வீட்டில் இருந்த படியே தொழில் செய்து எப்படி லாபம் பெறுவது மற்றும் அதற்கான முதலீடு போன்ற அனைத்தையும் இன்றைய பதிவில் விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தினமும் 9,250 ரூபாய் சம்பாதிக்க போட்டியே இல்லாத அருமையான தொழில்..!
அதிக லாபம் தரக்கூடிய தொழில்:
இந்த நவீன காலம் மட்டும் இல்லாமல் வருங்காலத்திலும் என்றும் அதிக லாபம் தரசக்கூடிய தொழில்களில் Perungayam Powder Business- ம் ஒன்று. நீங்கள் கடையில் பணம் கொடுத்து வாங்கும் பெருங்காயத் தூளினை இனி வீட்டிலேயே செய்து அதிக வருமானம் பெறலாம்.
Asafoetida Powder Business in Tamil:
முதலீடு:
Perungayam Powder தொழிலை செய்வதற்கு மிஷின் தேவையில்லை. முதலீடு 5,000 மட்டும் போதும்.
மூலப்பொருள்:
- அரபிக் கம் பவுடர்(Arabic Gum Powder )- 2 1/2 கிலோ
- காப்லி (kabli )- 25 கிராம்
- கோதுமை மாவு- 2 1/2 கிலோ
- பிளாஸ்டிக் பாக்ஸ்
- இந்த தொழிலை செய்து விற்பனை செய்வதற்கு நீங்கள் FAASI License பெற்றிருக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் wholesale மளிகை கடையில் கிடைக்கும்.
தேவையான இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு வீட்டில் சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும். உங்களுக்கு தேவைப்பட்டால் தனியாக கடை வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.
பெருங்காயத்தூள் தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் ஒரு பெரிய அளவிலான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பாத்திரத்தில் Arabic Gum Powder 2 1/2 கிலோ மற்றும் கோதுமை மாவு 2 1/2 கிலோ இரண்டையும் கொட்டி கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரத்தில் இருக்கும் மாவினை உங்களுடைய கைகளால் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் மாவு கலப்பதை பொறுத்து தான் பக்குவம் வரும். அதனால் பக்குவமாக மாவினை கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக 25 கிராம் காப்லியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைய விட வேண்டும். காப்லி நன்றாக கரைந்த பிறகு பால் போன்ற பதத்திற்கு வந்துவிடும்.
கடைசியாக கலந்து வைத்துள்ள மாவில் காப்லி தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்றாக ஒரு கரண்டியில் கலந்து கொள்ள வேண்டும். பவுடர் கட்டியாகாமல் பொறுமையாக கரண்டியால் கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் பெருங்காயத்தூள் பவுடர் தயாராகிவிட்டது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?
விற்பனை செய்யும் முறை:
தயார் செய்த பெருங்காய தூளினை 20 கிராம் மற்றும் 50 கிராம் அளவிலான பிளாஸ்டிக் பாக்சில் போட்டு நிரப்பி கொள்ளுங்கள்.
நீங்கள் தயார் செய்த 20 கிராம் பெருங்கத்தூளின் தோராய விலை 28 ரூபாய் ஆகும். அதேபோல 50 கிராம் பெருங்காயத்தூளின் தோராயர விலை 77 ரூபாய் ஆகும்.
ஒரு நாளைக்கு தோராயமாக நீங்கள் 20 கிராம் பெருங்காயத்தூளில் 10-ம் மற்றும் 50 கிராம் பெருங்காயத்தூளில் 10-ம் விற்பனை செய்தால் தோராயமாக 1,050 ரூபாய் சம்பாதிக்க முடியம்.
இதேபோல விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு நீங்கள் தோராயமாக 31,500 வரை வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியும். இந்த தொழில் எப்போதும் டிமெண்டாக இருக்கும் தொழில் வரிசையில் ஒன்றாக இருக்கிறது.
தயார் செய்த பெருங்காயதூளினை மளிகை கடை, பெரிய Department Store மற்றும் வாராந்திர சந்தை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |