வீட்டில் இருந்தபடியே மாதம் 1,00,000 ரூபாய் வரையும் சுலபமாக சம்பாதிக்கலாம்

Advertisement

போட்டி இல்லாத தொழில்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் அருமையான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பிஸ்னஸை நீங்கள் பார்ட்டைமாக கூட செய்யலாம். இந்த பிஸ்னஸ் ஆன்லைன் மூலமாகவும் செய்துவரலாம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பவர்கள், இந்த தொழில் செய்தால் நீங்கள் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் அவை என்ன பிஸ்னஸ் என்றும், அந்த பிஸ்னஸ் தொடங்க தேவைப்படும் மூலப்பொருள்கள், மெஷின்   போன்றவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தினமும் விற்பனை ஆகும் பொருளை பெண்கள் வீட்டில் தயார் செய்து 2 லட்சத்திற்கு மேல் லாபம் எடுத்துவிடலாம்..!

மரத்தூள் பவுடர் தயாரிப்பு:

இன்றைக்கு  நம் பார்க்க கூடிய பிஸ்னஸ் என்னவென்றால் இது தேவைப்படாது என்று தூக்கி வீசப்படும் மரங்களில் இருந்து தான் பிஸ்னஸ் செய்யப் போகிறோம். அதாவது மரத்துண்டுகளை மெஷின் மூலம் தூள்கள்  செய்து விற்பனை செய்வதுதான்.  இதில் அப்படி என்ன வருமானம் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா.? பொதுவாகவே மரத்தூள்களின் தேவைகள் அதிகமாக இருக்கிறது.  இந்த  மரத்தூள்களின் இருந்து சாம்பிராணி, ஊதுபத்தி, நோட்டு புத்தகம் அட்டைகள் என தயாரிப்பதற்கு மூலப்பொருளாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தூள்களை  தயாரிக்க உங்கள் வீட்டில் 500 sq ft இடம் இருந்தாலே போதும்.

Wood Crusher Machine in Tamil:

இந்த மரத்தூள்களை தயாரிப்பதற்கு தேவைப்பட கூடிய மெஷின் Wood Crusher Machine தேவைப்படுகிறது. இந்த மெஷின் ஆனது ஒரு மணி நேரத்தில் ஒரு டன் அளவிற்கு மரத்தூள்களை அரைக்க கூடிய  திறனை கொண்டதாகும்.  அதாவது 1000 கிலோ கிராம் வரையும் ஒரு மணி நேரத்தில் அரைத்து கொடுத்துவிடும். இந்த மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலையும் மாறுபடுகிறது. இந்த மெஷினின் ஆரம்ப விலை 65,000 ரூபாய் ஆக  இருக்கிறது. இதனை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த மரத்தூள்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலம் பொருட்கள் என்றால் மரம் தான். இந்த மரங்களை பெரிய இண்டஸ்ட்ரியில் இருந்து ஆகாது என்று வெளியே தூக்கி வீசப்படும் மரங்களை கொண்டு இந்த தூள்களை தயாரிக்கலாம். அல்லது பெரிய பெரிய மரங்களை அறுக்கும் பொழுது வரும் துண்டுகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு தயாரிக்கலாம்.

விற்பனை செய்யும் முறை:

மரத்தூள்களை தயாரித்த பிறகு அதை பேக்கிங் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். அல்லது ஊதுபத்தி, சாம்பிராணி, நோட்டு அட்டைகள் போன்றவை தயாரிக்கும் இடத்திற்கு விற்பனை செய்யலாம். மேலும் இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த தொழிலை செய்து மாதம் 1,00,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement