Low Investment Business Ideas
முதலாளியாக ஆக வேண்டும் என்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். மற்ற நிறுவனங்களில் சென்று வேலை பார்ப்பதை யாரும் விரும்புவதில்லை. தானே முதலாளியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. என்ன தொழில் செய்யலாம் என்ற யோசனையும் இருக்க வேண்டும். முதலீடு மற்றும் இந்த தொழில் செய்தால் எப்பொழுதுமே Demand இருக்குமா என்று பார்த்து தான் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். நீங்கள் சொந்தமாக தொழில் செய்வதற்கு ஒரு அருமையான தொழில் யோசனையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Roadside Food Business Ideas:
இந்த பதிவில் உணவு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் உணவு ரொம்ப முக்கியமானது. அதனால் உணவு தொழிலை செய்தால் நிச்சயம் நஷ்டம் ஆகாது. ஊருக்கு ஊர் ஹோட்டல் இருக்கும். ஆனால் அதில் சென்று சாப்பிடுபவர்களை விட ரோட்டு கடையில் சாப்பிடுபவர்கள் தான் அதிகம். எதனால் தெரியுமா.?
ஹோட்டலில் ஏற்கனவே செய்து வைத்திருப்பதை பரிமாறுவார்கள். ஆனால் ரோட்டு கடையில என்ன கேக்கிறோமா அதை நமக்கு நேரடியாகவும், ருசியாகவும் செய்து கொடுப்பார்கள். இதனால் தான் ரோட்டு கடையில் சாப்பிட பலரும் விரும்புகிறார்கள். அதனால் வாங்க தள்ளு வண்டியில் உணவு தொழில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
இடம்:
இந்த தொழிலை பேருந்து நிலையம், இரயிலடி, பார்க் , பீச் போன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் கடையை போட்டால் விற்பனை நன்றாக நடக்கும்.
மூலப்பொருட்கள்:
தள்ளுவண்டி, அடுப்பு, பாத்திரம், நாற்காலி, உணவு செய்வதற்கு தேவையான பொருட்கள் போன்றவை தேவைப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்
என்னென்ன உணவு செய்யலாம்:
- இட்லி
- தோசை
- பணியாரம்
- தேங்காய் சட்னி
- தக்காளி சட்னி
- சாம்பார்
- புதினா சட்னி
- கொத்தமல்லி சட்னி
- ஆம்லெட்
- ஆபாயில்
விற்பனை:
நீங்கள் ஆரம்பத்தில் செய்யும் போது மேல் கூறப்பட்டுள்ள உணவுகளை மட்டும் கொடுத்தால் போதும். தள்ளுவண்டி கடையில் கொடுக்கின்ற உணவானது ஆரோக்கியமாகவும், சூடாகவும், ருசியாகவும் இருக்கும். அதனால் நீங்களும் ஆரோக்கியமாகவும், ருசியாகவும் கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் உங்கள் கடையை நாடி வருவார்கள்.
வருமானம்:
ஒரு நாளிற்கு 100 நபர்கள் சாப்பிடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு நபர் 40 ரூபாய்க்கு சாப்பிடுகிறார்கள் என்றால் 100 நபர்களும் அது போல் சாப்பிட்டால் 4000 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரு நாளிற்கு 100 பேருக்கு உணவு தயாரிக்க 1000 ரூபாய் செலவாகும். அப்போ 4000 -1000 = 3000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |