தினமும் லாபம் மற்றும் டிமாண்ட் உள்ள தொழில்..! Samosa Making Business In Tamil..!
Samosa Making Business: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தினசரி லாபம் மற்றும் அதிக டிமாண்ட் உள்ள சமோசா தயாரிப்பு தொழிலை பற்றித்தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். தொழில் வியாபாரிகள் இதற்கு முன் இந்த தொழிலை மிசின் முறையில் இல்லாமல் கையால் சமோசா தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வந்தனர். இப்போதும் சிலர் கையினால் தொழிலை செய்து வருகின்றனர். இந்த தொழிலை எளிமையாக செய்வதற்கு இப்போது மிசின் வந்துவிட்டது. இந்த சமோசா தொழிலை மிசின் மூலம் செய்து தொழிலை எப்படி சுலபமாகவும், அதிக லாபம் தினமும் எப்படி பெறலாம் என்ற முழு விவரங்களையும் இப்போது படித்தறியலாம் வாங்க..!
குறைவான முதலீடு..! யாரும் பண்ணாத புதிய தொழில்..! |
தொழில் துவங்க இட வசதி:
சமோசா தயாரிப்பு தொழிலை துவங்க வீட்டின் சிறிய அறை போதுமானது.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு சமோசா தயாரிப்பு மிசின் அவசியம். அடுத்ததாக இந்த தொழிலுக்கு ஏற்ற மூலப்பொருளான மைதா மாவு, சமோசாவிற்கு தேவையான காய்கறிகள், எண்ணெய் போன்றவை தேவைப்படும் மூலப்பொருளாகும்.
தேவைப்படும் இயந்திரம்:
இந்த சமோசா தயாரிப்பு தொழில் துவங்க தேவைப்படும் இயந்திரம் இதுதான். இந்த இயந்திரமானது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றது.
இயந்திரத்தின் ஆரம்ப விலையானது ரூ.40,000/- முதல் ஆன்லைனில் கிடைக்கின்றது. தங்களுக்கு பிடித்த வகையில் உள்ள மிஷினை வாங்கி இப்போதே தொழிலை தொடங்குங்கள்.
இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..! |
இயந்திரத்தில் சமோசா தயாரிப்பு முறை:
சமோசா தயாரிப்பு தொழில் துவங்க ஆசைப்படுபவர்கள் சமோசா ரெடி செய்வதற்கான அந்த மசாலாவினை தயாரித்து புனல் வடிவிலுள்ள இடத்தில் சேர்க்கவும்.
அடுத்து மைதாவினை அதன் அருகில் உள்ள மிசின் பார்ட்டில் சேர்க்கவும். நீங்கள் கையினால் சமோசாவை தேய்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மிஷினில் மாவினை சேர்த்தாலே போதும்.
மிஷினானது உள்ளே செலுத்திய மாவினை சமோசா வடிவில் தயாரித்து கொடுக்கும். அதன் பிறகு எண்ணெயில் பொரித்து சமோசாவினை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சமோசா தயாரிப்பு இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2000 வரையிலும் சமோசா தயாரிக்கலாம். சமோசா தயார் செய்வதற்கு பொதுவாகவே இரண்டு ஆட்கள் தேவைப்படும். மடிப்பதற்கு மற்றும் மடித்தவற்றில் மசாலாவினை வைப்பதற்கு தேவைப்படுவார்கள்.
அந்த வேலைகளை குறைப்பதற்காகவே புதிய முறையில் மிசின் வந்துவிட்டது. சுலபமாகவே உங்களுடைய வேலைகளை முடித்து கொள்ளலாம்.
தினமும் லாபம் தரும் மிட்டாய் விற்பனை இயந்திரம் |
சமோசா தொழில் சந்தை வாய்ப்பு:
இது போன்று சமோசா தயாரிப்பு தொழிலை கையால் தொழிலை மேற்கொள்ளாமல் மிஷின் மூலம் செய்து வந்தால் தொழிலில் முன்னேற்றம் மற்றும் அதிக லாபம் காணலாம்.
மிசின் மூலம் செய்வதால் அதிக விற்பனை செய்யலாம். அதோடு டீ கடைகளில், ரயில்வே நிலையங்களில், ஹோட்டல்களில், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளுக்கு distributor மூலம் மொத்தமாக விற்பனை செய்யலாம்.
லாபம்:
இந்த தொழிலில் தினமும் லாபம் இருந்துக்கொண்டே இருக்கும். அனைத்து காலங்களிலும் செய்யக்கூடிய முதன்மை பெற்ற தொழில். சமோசா தயாரிப்பு மிஷினை வாங்கி சுயமாக தொழில் தொடங்க உள்ளவர்கள் இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்து நிறைய லாபம் பெற அன்பான வாழ்த்துக்கள்..! நன்றி வணக்கம்..!
100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில் பட்டியல் |