2025-ம் ஆண்டிற்கான புதிய தொழில் தொடங்க நல்ல நாள் முழு விபரம்

Advertisement

புதிய வேலையில் சேர நல்ல நாள் 2025 | Tholil Thodanga Nalla Naal 2025

புதிய தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு, இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும். ஆம் இந்த பதிவில் புதிய தொழில் தொடங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் 2025-ம் ஆண்டு எப்போது எல்லாம் இருக்கிறது என்பதை கீழ் அட்டவணையில் பட்டியலிட்டுள்ளோம், அவற்றை தெரிந்துகொள்வதற்கு முன் தொழிலை பற்றி ஆன்மிக தகவல் கூறும் சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

தொழில் ஸ்தானம்:-

தொழில் ஸ்தானம் என்பது ஒருவரின் ஜாதக லக்னத்திலிருந்து 10-ம் இடத்தில் அமைகின்றது. 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும், 10-ம் வீடும் வலுப் பெற்றிருக்கும் அன்பர்கள் சொந்தத்தொழிலில் வெற்றி பெறமுடியும். அதேபோல் கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் இடங்களில் குரு உலவும் போது தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.

கடை திறக்க நல்ல நாள் 2025:

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அமிர்த யோகம் உள்ள நாளில் தொழில் தொடங்கினால் மிகவும் சிறப்பாக அமையும். அதேபோல் சித்தயோகம், மரணயோகம், பிரபாலாரிஷ்டயோகம் ஆகியவற்றில் தொழில் தொடங்குவதை நிச்சயம் தவிர்த்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது 2025-ம் ஆண்டு தொழில் தொடங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் எப்போது எல்லாம் இருக்கிறது என்பதை பற்றி கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.

தொழில் தொடங்க நல்ல கிழமை

புதிய தொழில் தொடங்குவதற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி போன்ற நாட்கள் சிறந்தவையாக இருக்கிறது.

ஆனி மாதத்தில் தொழில் தொடங்கலாமா:

ஆனி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வார்கள். அதையும் நல்ல நாட்கள் இருக்கிறதா என்று செக் செய்து விட்டு தான் செய்வார்கள். அதனால் இந்த மாதத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்காது.

தொழில் தொடங்க நல்ல நட்சத்திரம்:

 உத்திரட்டாதி, ரோகிணி, மிருகசீரிடம், அனுஷம், சித்திரை, பூசம், உத்திரம், ஸ்வாதி, மூலம், திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்றவையாக இருக்கிறது. 
புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025

Shubh Muhurat for Starting New Business 

newதொழில் தொடங்க நல்ல ஏப்ரல் மாதம் 2025:-

நாள் நேரம்
ஏப்ரல் 2, புதன் காலை 05:17 முதல் 10:49 வரை
ஏப்ரல் 7, திங்கள்  காலை 08:31 முதல் மதியம் 12:44 வரை
ஏப்ரல்  20, ஞாயிறு காலை 09:35 முதல் 12:19 வரை
ஏப்ரல்  28, திங்கள் காலை 09:08 முதல் மதியம் 01:42 வரை

தொழில் தொடங்க நல்ல மார்ச் மாதம் 2025:-

நாள் நேரம்
மார்ச் 01, சனி காலை 07:17 முதல் மதியம் 12:55 வரை
மார்ச் 19, புதன் காலை 08:12 முதல் மதியம் 01:36 வரை

தொழில் தொடங்க நல்ல மே மாதம் 2025:-

நாள் நேரம்
மே 07, புதன் காலை 08:31 முதல் மதியம் 01:06 வரை
மே 17, சனி காலை 07:51 முதல் 12:27 வரை
மே 25, ஞாயிறு காலை 11:57 முதல் மதியம் 02:13 வரை

தொழில் தொடங்க நல்ல ஜூன் மாதம் 2025:-

நாள் நேரம்
ஜூன் 09, திங்கள்  காலை 06:21 முதல் 08:36 வரை
ஜூன் 18, புதன் காலை 05:54 முதல் மதியம் 12:36 வரை
ஜூன் 28, சனி காலை 07:22 முதல் 09:42 வரை
ஜூன் 30, திங்கள்  காலை 09:31 முதல் 11:51 வரை

தொழில் தொடங்க நல்ல ஜூலை மாதம் 2025:-

நாள் நேரம்
ஜூலை 10, வியாழன் மாலை 03:47 முதல் 06:06 வரை
ஜூலை 19,  சனி மாலை 05:31 முதல் 07:33 வரை
ஜூலை 20, ஞாயிறு மாலை 03:07 முதல் இரவு 07:31 வரை
ஜூலை 26, சனி காலை 06:12 முதல் மதியம் 12:25 வரை
ஜூலை 27, ஞாயிறு மாலை 04:57 முதல் 07:03 வரை

தொழில் தொடங்க நல்ல ஆகஸ்ட் மாதம் 2025:-

நாள் நேரம்
ஆகஸ்ட் 06, புதன் மாலை 04:17 முதல் 06:22 வரை
ஆகஸ்ட் 07, வியாழன் காலை 07:14 முதல் 09:22 வரை
ஆகஸ்ட் 11, திங்கள்  மாலை 03:57 முதல் இரவு 07:45 வரை
ஆகஸ்ட் 15, வெள்ளி மாலை 03:44 முதல் 05:49 வரை
ஆகஸ்ட் 24, ஞாயிறு காலை 06:24 முதல் 08:15 வரை
ஆகஸ்ட் 30, சனி காலை 06:29 முதல் மதியம் 02:44 வரை

தொழில் தொடங்க நல்ல செப்டம்பர் மாதம் 2025:-

நாள் நேரம்
செப்டம்பர் 03, புதன் காலை 09:51 முதல் மாலை 04:32 வரை
செப்டம்பர் 26, வெள்ளி மதியம் 12:59 முதல் மாலை 06:11 வரை

தொழில் தொடங்க நல்ல அக்டோபர் மாதம் 2025:-

நாள் நேரம்
அக்டோபர் 05, ஞாயிறு மதியம் 12:25 முதல் மாலை 04:08 வரை
அக்டோபர் 09, வியாழன் காலை 07:27 முதல் மதியம் 02:12 வரை
அக்டோபர் 15, புதன் மாலை 01:48 முதல் மாலை 06:21 வரை
அக்டோபர் 18, சனி மாலை 03:18 முதல் 04:47 வரை
அக்டோபர் 23, வியாழன் காலை 06:56 முதல் 08:53 வரை
11:11 மணி முதல் மாலை 4:27 வரை

தொழில் தொடங்க நல்ல நவம்பர் மாதம் 2025:-

நாள் நேரம்
நவம்பர் 05, புதன் காலை 10:21 முதல் 12:24 வரை
மதியம் 02:09 முதல் மாலை 06:34 வரை
நவம்பர் 06, வியாழன் காலை 07:34 முதல் 2:05 வரை
மாலை 3:30 மணி முதல் மாலை 6:32 மணி வரை
நவம்பர் 14, வெள்ளி காலை 07:27 முதல் 11:51 வரை

தொழில் தொடங்க நல்ல டிசம்பர் மாதம் 2025:-

நாள் நேரம்
டிசம்பர் 03, புதன் காலை 07:27 முதல் 10:36 வரை
12:18 மணி முதல் 01:46 வரை
டிசம்பர் 11, வியாழன் காலை 07:35 முதல் 10:05 வரை
11:45 முதல் மதியம் 02:37 வரை
டிசம்பர் 17, புதன் காலை 07:37 முதல் 02:14 வரை
மதியம் 03:49 முதல் 05:47 வரை
டிசம்பர் 21, ஞாயிறு காலை 07:39 முதல் 09:25 வரை
காலை 11:06 முதல் மாலை 03:35 வரை
டிசம்பர் 26, வெள்ளி மாலை 03:15 முதல் இரவு 07:26 வரை
டிசம்பர் 27, சனி காலை 09:03 முதல் 10:44 வரை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> பொதுநலம்.com
Advertisement