முதலீடு இல்லாத தொழில் | No Investment Business in Tamil
இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லோருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். சுயதொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நம்மிடம் பணம் இருக்க வேண்டும். ஆனால் பணம் இல்லாதவர்கள் கூட சுயதொழில் தொடங்கலாம்.
அது எப்படி என்று தானே கேட்குறீர்கள்..? ஆமாங்க முதலீடு செய்யாமல் சுயதொழில் தொடங்கலாம். முதலீடு இல்லாமல் கை நிறைய சம்பாதிக்கும் அந்த தொழில் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம்.
போட்டி இல்லாத தொழில்:
- பலபேருக்கு சுயதொழில் தொடங்க ஆசை இருக்கும். ஆனால் முதலீடு போடுவதற்கு பணம் இருக்காது, இடம் இருக்காது. அப்படி இருக்கின்றவர்களுக்கு இந்த தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கிராமப்புறங்களில் வேண்டாமென்று தூக்கி போடும் பொருளை வைத்து தினமும் ரூ.4000 கூட சம்பாதிக்கலாம். இந்த தொழிலை ஆண்கள் பெண்கள் என யாருவேண்டுமானாலும் தொடங்கலாம்.
- வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் கூட இந்த தொழிலை தொடங்கி பணவரவை ஈட்டலாம். அதாவது நாம் வேண்டாமென்று தூக்கி போடும் புளியங்கொட்டையை வைத்து தான் தொழில் செய்ய போகிறோம். வாருங்கள் கை நிறைய சம்பாதிக்கக்கூடிய அந்த அருமையான தொழிலை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..! |
புளியங்கொட்டை பொடி எதற்கெல்லாம் பயன்படுகிறது:
- புளியங்கொட்டை பொடி அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- நம் உடலில் ஏற்படும் அஜீரண பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிற்று பிரச்சனை, பல் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இதனால் புளியங்கொட்டை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், மருந்தகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
புளியங்கொட்டை பொடி தயாரிக்கும் முறை:
கிராமப்புறங்களில் புளியங்கொட்டை அதிகமாவே கிடைக்கிறது. கிராமங்களுக்கு சென்று புளியங்கொட்டை வாங்கி வாருங்கள். இதற்காக நீங்கள் பணம் தர தேவையில்லை. ஏனென்றால் அவர்களே இதை வேண்டாமென்று தான் வைத்திருப்பார்கள். அப்படி நீங்கள் குடுக்க நினைத்தால் உங்களால் முடிந்ததை கொடுத்து வாங்கி வரலாம்.
சும்மா கிடைக்க கூடிய பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா.? |
அந்த புளியங்கொட்டைகளை வாங்கி சுத்தமாக கழுவி அதை 1 நாள் முழுவதும் வெயிலில் காயவைக்க வேண்டும்.
மறுநாள் அதை எடுத்து ஒரு பெரிய கடாயில் போட்டு வறுக்க வேண்டும். இதை நன்றாக வறுத்து ஆறவைக்க வேண்டும்.
பிறகு அதன் தோலை நீக்கி விடுங்கள். நீங்கள் புளியங்கொட்டையை வறுத்ததால் தோலை ஈசியாக நீக்கி விடலாம். தோலை நீக்கிய பிறகு அதை ஒரு மிக்சி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் இதை மிக்சியில் அரைப்பதை விட கிரைண்டரில் போட்டு அரைப்பது தான் நல்லது. ஏனென்றால் மிக்சியில் அரைப்படுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கிரைண்டர் என்றால் எளிதாக அரைத்துவிடலாம்.
இதை அரைப்பதற்கு முன், கிரைண்டரை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து கொண்டு பவுடரை அரைத்து வைத்து விடுங்கள்.
பேக்கிங் செய்தல்:
பிறகு 100 கிராம் பாக்கெட், 1/4 கிலோ பாக்கெட், 1/2 கிலோ பாக்கெட், 1 கிலோ பாக்கெட் என உங்கள் தேவைக்கேற்ற அளவில் உள்ள பாக்கெட்டுகளை வாங்கி கொள்ளுங்கள். இந்த பாக்கெட் வாங்குவதற்கு மட்டும் தான் நீங்கள் செலவு செய்ய வேண்டும்.
ஒரே வாரத்தில் லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செஞ்சி பாருங்க..! |
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
பிறகு அரைத்து வைத்த புளியங்கொட்டை பொடியை எடுத்து பாக்கெட்டுகளில் பேக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பவுடரை உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், நாட்டு மருந்து கடை, மருந்தகம் போன்ற இடங்களில் விற்பனை செய்யுங்கள்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கென ஒரு வலைத்தளம் ஆரமித்து ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள்.
வருமானம்:
இப்பொழுது புளியங்கொட்டை பொடி ஆன்லைனில் 200 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் ஒரு நாளைக்கு நீங்கள் 10 கிலோ விற்பனை செய்தீர்கள் என்றால் தினமும் 4,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்தலிங்கை கிளிக் செய்யவும்