வீட்டில் இருந்தபடியே பார்ட்டைம் பிஸ்னஸ் தினமும் 5, 000 ரூபாய் வரையும் வருமானம்

small part time business ideas in tamil

Buying And Selling Business in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் வியாபார பதிவில் ஒரு அருமையான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பிஸ்னஸை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் இந்த பிஸ்னஸை பார்ட்டைமாக செய்து வரலாம். அதோடு இந்த பிஸ்னஸை நீங்கள் முழுநேரம் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது.  முக்கியமாக இந்த பிஸ்னஸை செய்வதற்கு இடவசதிகள் எதுவும் தேவையில்லை,  மேலும் அவை என்ன பிஸ்னஸ் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தினமும் 2,500 ரூபாய்க்கு மேல் வரையும் சுலபமாக வருமானம் பெற இந்த தொழிலை செய்து பாருங்கள்

Disposable Rain Coat Business in Tamil:

இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்ற  பிஸ்னஸ் என்னவென்றால் மழைக்காலத்திற்கு பயன்படுத்தும் Disposable Rain Coat மொத்தமாக வாங்கி விற்பனை செய்வது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இனிமேல் மழைக்காலங்கள் வரப்போவதால், இந்த பிஸ்னஸை யார் செய்து வந்தாலும் அதிகமான லாபத்தை பெறமுடியும்.

இந்த Disposable Rain Coat மக்களுக்கு மிகவும் பயனுள்ளதக இருக்கும். அதாவது ஒரு  இடங்களுக்கு செல்லும் பொழுது திடீரென்று மழை வந்தால் குடை இருக்காது. எனவே இந்த Disposable Rain Coat மிகவும் உதவியாக இருக்கும். அதோடுமட்டுமின்றி இந்த Disposable Rain Coat எல்லா விதமான அளவுகளிலும் இருக்கிறது. இதனை நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது உங்களுடைய பர்ஸில் கூட வைத்து எடுத்து செல்லலாம். அதேபோல் எல்லாவிதமான நிறங்களிலும் கிடைக்கும்.

வாங்கி விற்பனை செய்யும் முறை:

இந்த Disposable Rain Coat நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் குறைந்த விலையில்  வாங்கிக்கொள்ளலாம்.

இதை நீங்கள் ஆன்லைனில் வாங்கும் பொழுது 10 ரூபாய்க்கு வாங்குவீர்கள், தோராயமாக  நீங்கள் விற்பனை செய்யும் பொழுது 20 ரூபாய் அல்லது 40 ரூபாய் வைத்து விற்பனை செய்யலாம்.

தோராயமாக  நீங்கள் ஒரு Disposable Rain Coat  20 ரூபாய் வைத்து ஒரு நாளைக்கு நீங்கள் 250 Disposable Rain Coat விற்பனை செய்யும் பொழுது 5,000 ரூபாய் வரையும் வருமானம் பெற முடியும்.

நீங்கள் விற்பனை செய்யும் அளவுகளை பொறுத்து உங்களுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும். இந்த  பிஸ்னஸை செய்வதினால் உங்களுக்கு  மிகவும் சுலபமாக இருக்கும்.

இந்த Disposable Rain Coat மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்கள், சூப்பர் மார்க்கெட், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்து வந்தால் அதிகமான லாபத்தை எதிர் பார்க்க முடியும். மேலும் இந்த பிஸ்னஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த பிஸ்னஸை தொடங்கி அதிகமான லாபத்தை பெறுங்கள்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil