Summer Time Business Ideas
சுயதொழில் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு தொழிலாக உள்ளது. ஏனென்றால் சுயதொழில் மூலம் தான் நாம் நினைத்த மாதிரியான வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெற முடியும். ஆகையால் இன்றைய காலத்தை பொறுத்தவரை சின்ன தொழில் மற்றும் பெரிய தொழில் இவற்றில் எதுவாக இருந்தாலும் அதனை உடனே செய்கின்றனர். அந்த தொழிலும் கூட சிலர் சீசனிற்கு ஏற்ற மாதிரியான தொழிலை செய்கின்றனர். ஆகையால் இன்றைய பதிவில் இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் எது என்ன தொழில் அதனை எப்படி செய்வது போன்ற அனைத்தினையும் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்:
இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான மற்றும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது இந்த வெயில் காலத்தில் அதிகமாக காணப்படுவதால் இன்று Nannari Sarbath Business-ஐ பற்றி தான் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
தேவையான முதலீடு:
நீங்கள் இந்த Nannari Sarbath Business-ஐ தொடங்க வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 10,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவையான மூலப்பொருள்:
- Nannari Sarbath
- எலுமிச்சை பழம்
- நார்த்தம் பழம்
- சர்க்கரை
- Ice Cube
- Glass டம்ளர்
- ஜூஸ் Jar Plastic
- ஸ்பூன்
- தள்ளுவண்டி- 1
- Chair- 1
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள்.
தேவையான இடம்:
இத்தகைய தொழிலை செய்வதற்கு மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடமாக இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அந்த இடம் கொஞ்சம் நிழலாகவும் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ தினமும் காலை 11 to 12 மணி மட்டும் வேலை செய்தால் போதும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
தொழில் தொடங்குவது எப்படி.?
நீங்கள் இந்த தொழிலுக்கு ஏற்ற மாதிரியான அனைத்து மூலப்பொருட்களையும் வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள். அதனுடன் சுத்தமான தண்ணீரும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு வாடிக்கையாளர்கள் உங்களுடைய கடைக்கு அவர்களே தேடி வருவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி உடனே நன்னாரி சர்பத் நீங்கிள் போட்டு கொடுக்கலாம்.
சில நேரம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு பார்சல் கேட்டல் அதனையும் நீங்கள் ஒரு கவரில் கட்டி கொடுக்கலாம்.
வருமானம்:
ஒரு Glass டம்ளர் நன்னாரி சர்ப்பத்தின் விலை தோராயமாக 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே வீட்டிற்கு பார்சல் என்றால் அதற்கு 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி என்றால் ஒரு நாளைக்கு பார்சல் நன்னாரி சர்பத் மற்றும் கடையில் இருந்து குடிக்கும் நன்னாரி சர்பத் இந்த இரண்டினையும் சேர்த்து தோராயமாக ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ ஒரு நாளுக்கு 5,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்.. எத்தனை வருடம் ஆனாலும் பொருட்கள் கெட்டுப்போகாது..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |