டிரேட் லைசென்ஸ் பற்றிய தகவல்கள் | Trade License Eduppathu Eppadi
நாம் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் அதற்கு முன் தொழில் உரிமம் பெறுவது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் டிரேட் லைசென்ஸ் என்றால் என்ன, டிரேட் லைசென்ஸ் யாரெல்லாம் எடுக்க வேண்டும், எப்படி அப்ளை செய்வது போன்ற முழு தகவலையும் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்த பதிவு புதிதாக தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க டிரேட் லைசென்ஸ் எடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
டிரேட் லைசென்ஸ் என்றால் என்ன? – லைசென்ஸ் எடுப்பது எப்படி?
- டிரேட் லைசென்ஸ் என்பது ஒரு தொழிலை தொடங்குவதற்கு தேவையான உரிமம் ஆகும். இது முனிசிபாலிட்டி அலுவலகத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் டிரேட் லைசென்ஸ் எடுக்க வேண்டும்?
- உணவகங்கள், மளிகை கடை, பேக்கரிகள் இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில் தொடங்குபவர்கள் இந்த லைசென்ஸ் வாங்க வேண்டும். இந்த டிரேட் லைசென்ஸ் சான்றிதழ் அல்லது ஆவணம் (Document) போன்று இருக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- Id Proof
- Address Proof
- Sales Deed/ Rental Agreement
- Installation Certificate
Id Proof – லைசென்ஸ் எடுப்பது எப்படி?
- டிரேட் லைசென்ஸ் பெறுவதற்கு தங்களுக்கு Id Proof தேவைப்படும் அதற்கு நீங்கள் உங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, Voter id, Tin Number போன்ற ஐடிகளில் ஏதேனும் ஒரு ஐடியை பயன்படுத்தி கொள்ளலாம்.
Address Proof:
- இதற்கு நீங்கள் பேங்க் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் (Driving License), ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
Sales Deed/ Rental Agreement:
- நீங்கள் தொழில் தொடங்கும் இடம் சொந்த இடமாக இருந்தால் Sales Deed சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தொழில் தொடங்கும் இடம் வாடகை இடமாக இருந்தால் Rental Agreement-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
Installation Certificate – லைசென்ஸ் எடுப்பது எப்படி?
- Manufacturing சார்ந்த தொழில் புரிபவர்கள் மெஷின்கள் வைத்திருந்தால் அதற்கான Installation Certificate வாங்கி சமர்பிக்க வேண்டும். இந்த Certificate-ஐ நீங்கள் எந்த கம்பெனியில் மெஷின் வாங்குனீர்களோ அந்த கம்பெனியில் இருந்து பெற்று கொள்ளலாம்.
- இந்த மெஷின்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் தேவை 5 Hp மின்சாரத்திற்குள் இருந்தால் இந்த சான்றிதழ் கொடுக்க வேண்டாம், ஆனால் 5 Hp மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தினால் நீங்கள் Installation Certificate கொடுக்க வேண்டும்.
டிரேட் லைசென்ஸ் எடுப்பது எப்படி?
- india.gov.in என்ற அதிகார வலைதளத்திற்கு செல்லவும்.
- அந்த வலைதளத்தில் இருக்கும் Application Form-ல் தங்களது விவரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட ஆவணங்களை இணைத்து Submit செய்யவும்.
- இதை அப்ளை செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
- Application Submit செய்த பிறகு முன்சிபாலிட்டி அலுவலகத்தில் இருந்து நீங்கள் செய்யும் தொழிலை ஆய்வு செய்வதற்காக வருவார்கள். இந்த ஆய்வு முடிந்த பின்னரே உங்களுக்கு Trade Licensce வழங்கப்படும்.
- இந்த லைசென்ஸ் வாங்குவதற்கு நீங்கள் பணம் கட்ட வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மெஷின்கள், மின்சார தேவை, இட வசதியை பொறுத்தே இதற்கான கட்டணம் வாங்கப்படும்.
- டிரேட் லைசென்ஸ் Approval ஆன பிறகு உங்கள் தொலைபேசிக்கு SMS வரும். Approval ஆன பிறகு Citizen Portal இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி Trade License-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- இந்த லைசென்ஸை நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ரினிவல் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதத்திற்குள் ரினிவல் செய்ய வேண்டும்.
டீலர்ஷிப் எடுப்பது எப்படி |
யாரும் செய்திடாத முற்றிலும் புதிய தொழில் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |