மாதம் வருமானம்
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவரிடத்திலும் அதிகரித்து வருகிறது. அதற்காக என்ன தொழில் செய்வது, எந்த தொழில் செய்தால் வருமானம் கிடைக்கும் என்ற பல யோசனைகள் வருகிறது. இன்னும் சிலருக்கு முதலீடு அதிகமாக போட வேண்டும், இல்லையென்றால் பொருட்கள் ஏதும் வாங்கி விற்க வேண்டுமா என்ற பல கேள்விகள் இருக்கிறது.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இந்த பதிவு இருக்கும். எப்படியென்றால் இந்த தொழில் செய்வதற்கு பொருள் வாங்க வேண்டாம், விற்க வேண்டாம் வீட்டிலிருந்தபடியே மாத வருமானம் கிடைக்கும். இதற்கு நீங்கள் Degree படித்திருந்தால் போதுமானது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Coaching Centre Business Plan in Tamil:
உங்களுக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்னால் வெளியில் வேலைக்கு செல்ல முடியாது என்று நினைப்பவர்கள் TUITION தொழிலை செய்யலாம். மேலும் நீங்கள் எந்த வேலை செய்தாலும் இதை Part Time ஆகவும் செய்யலாம்.
இதையும் படியுங்கள் ⇒ 1 ரூபாய் கூட முதலீடு இல்லாத தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
முந்தைய காலத்தில் படிக்காத குழந்தைகள் தான் TUITION-க்கு செல்வார்கள். ஆனால் இப்பொது அப்படியில்லை எல்லாருமே TUITION செல்கிறார்கள். வருங்காலத்தில் இதற்கான Demand அதிகமாக இருக்கும்.
இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. உங்கள் வீடே போதுமானது. இல்லையென்றால் தனியாக இடம் பார்த்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தூரம் இல்லாதது போல் பார்த்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். கரும்பலகை, Sakpeace, Duster, Fan, போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் எடுக்கும் பாடத்தை பொறுத்து வருமானம் மாறுபடும். எடுத்துக்காட்டாக கணித பாடம் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு மாதம் 500 ரூபாய் பீஷாக வாங்கலாம்.
இதுவே வகுப்பை பொறுத்து மாறுபடும். நீங்கள் இந்த பாடத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றால் அந்த பாடத்தை நீங்கள் எடுக்கலாம். எல்லா பாடமும் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்தது போல் பீஸ் மாறுபடும். 50 மாணவர்கள் உங்களிடம் கற்கிறார்கள் என்றால் தோராயமாக ஒருவருக்கு 500 ரூபாய் என்றால் 50 மாணவர்களுக்கு 25,000 ரூபாய் மாதம் வருமானமாக கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சிறந்த தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |