Tulsi Powder Making Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து வாழ்க்கையை சீராக நடத்த வேண்டும் என்றால் அதற்கு அனைவருமே ஏதாவது ஒரு வியாபாரம் அல்லது சுயதொழிலை தொடங்க வேண்டும். அப்படி நாம் தொடங்கும் வியாபாரம் அல்லது சுயதொழில் ஏற்படும் லாப நஷ்டங்களையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். என்னால் வியாபாரத்தில் உள்ள அனைத்து நிலைமையையும் சமாளித்து நல்ல நிலைமைக்கு வந்து விடுவேன். ஆனால் என்ன சுயதொழில் தொடங்குவது என்று தான் தெரியவில்லை என்று சிந்தனை செய்பபவர்களுக்காக தான் தினமும் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சிறந்த சுயதொழில் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் துளசி பொடி தயாரிக்கும் தொழில் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த துளசி பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Tulsi Powder Making Business Plan in Tamil:
பொதுவாக துளசியில் பல நன்மைகள் உள்ளதை நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதனால் இந்த துளசியினை பல மருந்து பொருட்கள் தயாரிக்க மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றார்கள்.
அதனால் நீங்கள் இந்த துளசி பொடி தயாரிக்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த துளசி பொடி தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள துளசி இலை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா..? இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே..!
நீங்கள் தயாரித்து வைத்துள்ள துளசி பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள துளசியை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு நிழலில் காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள துளசி பொடியை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள், மருந்து பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ துளசி பொடியின் விலை 650 ரூபாய் – 700 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ துளசி பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 6,500 ரூபாய் – 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,95,000 – 2,10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த துளசி பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |