Vadagam Business in Tamil
இக்காலத்தில் சுயதொழில் செய்தால் மட்டுமே பண தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனை கணக்கில் கொண்டு பலபேர் சுயதொழில் செய்ய தொடங்கி விட்டார்கள். ஆனால் இன்னும் சிலர் சுயதொழில் தொடங்குவதற்கு அதிக பணம் வேண்டும் என்பதால் தொழிலை தொடங்காமல் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 100 ரூபாய் முதலீட்டில் கூட சுயதொழில் தொடங்கலாம். ஆமாங்க இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் போதும். அதுமட்டுமில்லாமல் படித்தவர்கள் படிக்காதவர்கள் என யார் வேண்டுமானாலும் இத்தொழிலை தொடங்கலாம். சரி வாங்க வாரம் 10 ஆயிரம் வருமானம் தரக்கூடிய அந்த தொழில் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நம் வீடுகளில் சாப்பிடும் போது உணவிற்கு சைடிஸ் ஆக வடகம் அப்பளம் போன்றவற்றை எடுத்து கொள்வோம். இது எல்லா வீடுகளிலும் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று. இந்த வடகத்தை வீட்டிலே செய்யலாம். ஆனால் அதெற்கெல்லாம் நேரம் இல்லாமல் வேலைக்கு செல்பவர்கள் கடைகளில் தான் வாங்குவார்கள். எனவே அப்படி எல்லோருக்கும் தேவையான வடகம் தொழிலை தான் இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். சுயதொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளளதாக இருக்கும். இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
அனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி |
How to Make Vadagam Business in Tamil:
வடகம் மற்றும் அப்பளம் வகைகள்:
- அரிசி வடகம்
- பூண்டு வடகம்
- தக்காளி வடகம்
- புதினா வடகம்
- ஆனியன் வடகம்
- ஜவ்வரிசி வடகம்
- பீட்ரூட் வடகம்
- கேரட் வடகம்
- அரிசி அப்பளம்
- கிழங்கு அப்பளம்
- மிளகு அப்பளம்
- உளுந்து அப்பளம்
- மோர் மிளகாய்
இதுபோன்ற பலவகையான வடகம் மற்றும் அப்பளம் வகைகள் நிறைய உள்ளன. இவற்றை தயாரிக்கும் முறையும் மிகவும் சுலபமான ஒன்று.
தேவையான மூலப்பொருட்கள்:
இத்தொழிலை தொடங்குவதற்கு முக்கிய மூலப்பொருளான கிரைண்டர் மற்றும் அரிசி, சீரகம் போன்றவை தேவை. மேலும் மேலே குறிப்பிட்டுள்ள வடகம் வகைகளில் நீங்கள் எதை செய்ய விரும்புகிறீர்களோ அந்த மூலப்பொருளை வாங்கி கொள்ளுங்கள்.
சுவை மணக்கும் தாளிப்பு வடகம் |
முதலீடு:
இத்தொழிலை தொடங்குவதற்கு 100 ரூபாய் முதலீடு இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் முதல் நாள் இரவே அரிசியை ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு மறுநாள் காலையில் ஊறவைத்த அரிசியை அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் அரைத்து வைத்த மாவை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் சீரகம் மற்றும் நீங்கள் செய்ய போகும் வடகத்தின் மூலப்பொருளை சேர்த்து கலந்து விடுங்கள்.
இவை நன்றாக வெந்து பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி இடியாப்பம் பிழியும் கட்டையில் இந்த மாவை வைத்து பிழிந்து விடுங்கள்.
இதை வெயிலில் நன்றாக காயவைத்து வடகம் பொரிக்கும் பதத்திற்கு வரும் வரை காயவைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை:
தொழிலை தொடங்குவதற்கு முன் உங்கள் தொழிலின் பிராண்டிற்கு நல்லதொரு பெயரை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு பிராண்டு பெயரில் ஒரு லேபிள் செய்து பேக்கிங் செய்யும் போது உள்ளே வைக்க வேண்டும்.
பேக்கிங் செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்த வடகத்தை 100 கிராம், 1/4 கிலோ, 1/2 கிலோ என உங்களின் விருப்பத்திற்கேற்ற பேக்கிங் கவரை வாங்கி பேக் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
உங்கள் வீட்டின் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை போன்றவற்றில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..! |
வருமானம்:
வடகம் ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கணக்கில் கொண்டால் கூட ஒரு கடைக்கு 50 பாக்கெட் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 500 ரூபாய் கிடைக்கும். அதேபோல் 20 கடைகளுக்கு ஆர்டர் எடுத்து விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக வாரத்திற்கு 10,000 ருபாய் வரை வருமானம் கிடக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |