லாபகரமான தொழில்
வணக்கம் நண்பர்களே 🙏 இன்று நம் வியாபார பதிவில் ஒரு அருமையான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பிஸ்னஸை தொடங்குவதற்கு குறைவான முதலீடு இருந்தாலே போதும், அதிகமான லாபத்தை பெறலாம் அதுமட்டுமின்றி இந்த தொழிலை யார்வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த பிஸ்னஸை பொறுத்தவரை அதிகமான டிமாண்ட் இருப்பதால், இந்த பிஸ்னஸை தொடங்கி அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் இவை என்ன பிஸ்னஸ் என்றும், இதை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடு விவரம் மற்றும் இடவசதிகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வீட்டில் இருந்தபடியே தினமும் 3000 வரை சம்பாதிக்கலாம் |
ஆணி தயாரிப்பு பிஸ்னஸ்:
இன்னைக்கி நம்ப தெரிந்துகொள்ள போகிற பிஸ்னஸ் என்னவென்றால் ஆணி தயாரிப்பது பற்றி தான், பொதுவாகவே கட்டுமான தொழில்களான வீடு கட்டுவதற்கு, நிறுவனங்கள் கட்டுவதற்கு, வீட்டில் உள்ள அழகுசாதன பொருட்களை மாட்டி வைப்பதற்காகவும், ஆணிகளின் தேவைகள் அதிகமாவே உள்ளது. இதன் காரணமாகவே ஆணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ஆசாரிகளுக்கு அதிகமாவே ஆணிகளின் தேவைகள் உள்ளது. எனவே நீங்களும் இந்த ஆணி தயாரித்து பிஸ்னஸ் செய்வதால் அதிகமான லாபத்தை பெற முடியும், மேலும் இவற்றை தயாரிக்க தேவைப்படும் பொருட்களை பார்க்கலாம்.
பிஸ்னஸ் செய்ய தேவைப்படும் இடவசதி:
இந்த பிஸ்னஸை தொடங்குவதற்கு உங்கள் வீட்டில் ஒரு சிறியதாக இடம் இருந்தாலே போதுமானது, அதாவது 10 × 10 இடம் இருந்தால் போதும் நீங்கள் இந்த பிஸ்னஸை தொடங்கலாம். இந்த பிஸ்னஸ் நன்றாக வளர்ச்சி அடைந்த பிறகு தனியாக ஒரு கடை அமைத்து கூட தொடங்கலாம்.
தேவைப்படும் மூலப்பொருள்:
இந்த ஆணி தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் Wire Rod, Wire Drawing Machine, Nail Making Machine போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. Wire Rod ஆனது அலுமினியம், துத்தநாதம், இரும்பு, நிக்கல், வெண்கலம், பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலகங்கள் எல்லாம் இதனை பயன்படுத்தி தயாரிக்கப்டுகிறது.
இதுபோன்ற தேவையான மூலப்பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்டுக்கிறது, இதனை நேரடியாகவும் வாங்கிக்கொள்ளலாம், அல்லது ஆன்லைன் மூலம் கூட பெற்றுக்கொள்ளலாம்.
ஆணி தயாரிக்கும் மெஷின்:
இந்த ஆணிகளை தயாரிப்பதற்கு Nail Making Machine தேவைப்படுகிறது. இந்த மெஷின் இருந்தால் மட்டும் தான் ஆணியை தயாரிக்க முடியும். இந்த மெஷின் இயங்குவதற்கு மின்சாரங்களும் தேவைப்படும். இந்த மெஷினில் எவ்வளவு பெரிய ஆணியாக இருந்தாலும் தயாரிக்க முடியும். இந்த மெஷினை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 50 கிலோ ஆணி வரையும் தயாரிக்கலாம். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஆணிகளை உற்பத்தி செய்தால் 500 அணிகளுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியும்.
வருமானம் மற்றும் முதலீடு:
இந்த பிஸ்னஸை ஆரம்பத்தில் புதிதாக தொடங்குவதற்கு 45000 ரூபாய் வரையும் செலவாகும். ஆனால் ஒரு நாளைக்கு 1 கிலோ ஆணியை சந்தைகளிலோ அல்லது கடைகளிலோ விற்பனை செய்யும் பொழுது 15,000 வரையும் லாபம் கிடைக்கும், நீங்கள் செய்யும் உற்பத்தின் விலையை பொறுத்து தான் வருமானமும் கிடைக்கும்.
விற்பனை செய்யும் முறை:
இந்த ஆணிகளின் பயன் அதிகமாக இருப்பதால், நீங்கள் தயார் செய்த ஆணிகளை ஒரு கடைக்கு 50 கிலோ என்ற கணக்கில் விற்பனை செய்து கொடுக்கலாம். ஒரு 10 அல்லது 15 கடைக்கு ஆர்டர் எடுத்து விற்பனை செய்வதினால் அதிகமான லாபத்தை பெறலாம். எனவே இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததால் நீங்களும் செய்து அதிகமான லாபத்தை பெறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |