கிராமப்புற தொழில்கள்
நண்பர்களே வணக்கம் பொதுவாக தொழில் தொடங்கவேண்டும் என்றால் நாம் நகர் புறங்களில் தொடங்குகள் என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம். அதே போல் அங்குள்ள விவசாயிகள் அனைவரும் நிலங்களை விற்றுவிட்டு இங்குவந்து நிறைய வகையான தொழில்களை செய்து வருகிறார்கள். இதுபோன்று நிலங்களை விற்று வருபவர்கள் இப்போது வேண்டுமானால் நல்லது என்று சொல்வார்கள். பிற்காலத்தில் நிலம் வச்சிருப்பவர்கள் தான் பணக்காரன். என்னடா இது படத்தில் உள்ளதை சொல்வதை போல் இருக்கிறது என்று நினைக்கலாம் ஆனால் அது தான் உண்மை. ஆகையால் முடிந்தளவு உங்களுடைய நிலங்களை விற்கலாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்றாலும் பரவில்லை. அதனை வைத்து வேறு என்ன விவசாயம் சார்ந்த தொழில்களை செய்யலாம் என்று யோசிங்கள். வாங்க உங்களுக்கு விவசாயம் சார்ந்த ஐடியாவை தெரிந்துகொள்ளலாம்.
நாற்று பண்ணை:
விவசாயத்திற்கு முக்கியமான அதற்கான காலத்தில் ஒவ்வொரு விதமான விவசாயத்தை செய்து வருகிறார்கள். பொதுவாக நெல் பயிர் தான் முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். ஆனால் அதனை செய்வது என்பது சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும். அதனை செய்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வள்வு கஷ்டம் என்று..!
நெல் விளைவிப்பது என்றால் சுலபமான ஒன்று அல்ல. அதற்கான முதலீடு. , உழைப்பு போட்டால் தான் அதற்கான லாபத்தை பெற முடியும். அதனை தொடர்ந்து செய்ய இப்போது சரியான நீர்வளமும் இல்லை பணமும் இல்லை அதனாலே 100% ல் 50% மக்கள் மட்டுமே செய்கிறார்கள் மற்றவர்கள் விவசாய நிலைத்தது விற்று வேறு தொழில்களை செய்ய முடிவு செய்கிறார்கள்.
உங்களால் நெல் விளைவிக்க முடிவில்லை என்றால் அந்த நிலத்தை வைத்து வேறு என்ன குறைந்த முதலீட்டில் செய்ய முடியும் என்று தெரிந்துகொள்ளவும்.
முதலில் நெல் விவசாயம் செய்ய போகிறார்கள் என்றால் அவர்களுக்கு முதல் தேவைப்படுவது நெல் விதை தான். சிலர் நாற்று தேவைப்படும். இப்போதெல்லாம் அனைவருக்கும் நாற்றுநட்டுதான் விவசாயம் செய்கிறார்கள்.
அப்போது நமக்கு இந்த விவசாயத்தை செய்யலாம் நாற்று மட்டுமே விற்க தொடங்கலாம்.
நாற்று என்றால் ஒரே நெல் வகை மட்டும் சொல்லவில்லை எல்லா வகையான நெல்கள் எல்லாம் தான். உதாரணத்திற்கு மாப்பிளை சம்பா, அன்னபூரணி, வசுந்தரா, கோதாவரி போன்ற நெல் வகைகள் தான் அதிககளவு நாற்று விவசாயம் செய்யலாம்.
நாற்று வைக்க முதலில் நிலத்தை நிறைய தண்ணீர் விட்டு உழுவவேண்டும். அதில் கலை இருந்தால் கலையை எடுத்திட்டு, இயந்திரத்தின் மூலமோ அல்லது, மாடுகளின் மூலமோ உழுவ வேண்டும்.
கொஞ்சம் நிறைய தண்ணீர் விட்டு நன்கு உழுவ வேண்டும். பின்னர் அதன் பின் அதனை ஒரு நாள் இரவு ஊறவிடவும். பின் மறுநாள் காலையில் 7 மணி முதல் விதை விட ஆரம்பித்து விடவேண்டும். குறிப்பிட்ட ரகங்களுக்கு குறைத்து 17 நாட்கள் முதல் அதிகளவு 27 நாட்கள் போதுமானது.
விதை விட்டு அதிகபட்சம் 3 இரண்டு நாட்களில் நாற்று வெளியில் தெரியும். அதன் பின் சிறிய அளவுநாற்று தேவைப்பவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு நாற்றுகளை பறித்து விற்கலாம்.
ஒரு சிலருக்கு கொஞ்சம் பெரியளவில் நாற்று தேவைப்படும், அதேபோல் ஒரு சில நெல் வகைகள் கொஞ்சம் அடர்த்தியாக நட்டால் தான் அது நல்ல மகசூல் கொடுக்கும்.
அதேபோல் ஒரே நெல் வகைகள் மட்டும் நற்றுவைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான நெல்கள் மகசூல் ஆகும். ஆகையால் அதையும் சாவடி செய்யலாம்.
ஒரு ஏக்கரில் ஒரு நெல் வகைகளை மட்டும் நாற்று வைக்க வேண்டும் என்று கட்டாயம் அல்லது. இரண்டு மூன்று ரக நெல் வகைகள் நாற்று வைக்கலாம்.
ஆகையால் நெல் பயிரிட்டு அதை மட்டும் சாவடி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் நினைக்கலாம் இதற்கும் முதலீடு தேவைப்படும் என்று அதை விட இதற்கு முதலீடு தேவை இல்லை அதே போல் அதில் இருக்கும் கஷ்டங்கள் இதில் இருக்காது.
இதற்கு உரங்களை தேவையில்லை இதை 17 நாட்களில் பறித்து கொடுக்கலாம் ஒரு கட்டு 100க்கும் கொடுக்கலாம். ஒரு விவசாயிக்கு 50 கட்டுகள் தேவைப்பட்டால் 100* 50 = 5,000 ஒரு ரகத்திற்கு மட்டும் 15 நாட்களில் 5,000 கிடைக்கும் என்றால் நீங்கள் 5 ராகம் விட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கிட்டு பாருங்கள்.
இதேபோல் விவசாய நிலத்தில் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள ⇒ உங்ககிட்ட இடம் இருக்கா? உடனே தயாராகுங்கள் நீங்களும் விவசாயிதான்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |