Wallpaper Business Ideas in Tamil
புதிதாக தொழில் தூங்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய பதில் நீங்கள் சொந்தமாக செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இப்பொழுது மற்றும் எதிர்காலத்திலுமே ட்ரெண்டிங்கில் உள்ள ஒரு அருமையான பிசினஸ் ஐடியாவை பற்றி தான் பார்க்க போகிறோம். அது ஒன்று இல்லை Wallpaper Business ஐடியாவை பற்றி தான். புதிதாக விடுகட்டுபவரும் சரி, ஏற்கனவே உள்ள வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சரி இந்த வால்பேப்பரை தேர்வு செய்கின்றன. ஆகவே நீங்கள் வால்பேப்பர் பிசினஸ் செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறமுடியும். இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் வரும் போன்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
வால்பேப்பர் வகை:
வால் மியூரல், வால்பேப்பர் மற்றும் வால் டாட்டூ என்ற மூன்று விதங்களாக இருக்கின்றன. இவற்றில் அதிநவீன வடிவமான முப்பரிமான டிஜிட்டல் வால்பேப்பர்கள் தற்போது அதிகப்படியான உபயோகத்தில் இருந்து வருகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 மாலை நேரங்களில் தினசரி வருமானம் தரும் தொழில்
வால்பேப்பர் ஸ்டோர்:
நீங்கள் அதிக முதலீடு இல்லாமல் குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை துவங்க வேண்டும் என்றால் நீங்கள் வால்பேப்பர் ஸ்டோர் வைக்கலாம். நீங்கள் வால்பேப்பரை உற்பத்தி செய்ய வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை.
இதற்கென்று பல நிறுவங்கள் உங்களுக்கு உதவி செய்கிறது. அதாவது அந்த நிறுவனத்திடம் நீங்கள் வால்பேப்பருக்கான கேட்லாக்கை வாங்கி கொண்டு நீங்கள் இந்த தோலை ஆரம்பிக்கலாம்.
ஆனால் உங்களிடம் சிறிய அளவில் இடம் இருக்க வேண்டும். அவற்றில் ஸ்டோர் ரூம் அமைத்து கொள்ள வேண்டும். பின் அந்த நிறுவனத்திடம் நீங்கள் மெட்டீரியலையும் வாங்கி கொள்ளலாம். இருப்பினும் நீங்கள் அவர்களுக்கு 50 ஆயிரம் அல்லது அதற்கு குறைந்த அளவில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.
அந்த மெட்டீரியலை வாங்கி நீங்கள் விற்பனை செய்யலாம். நீங்கள் விற்றுத்தரும் வால்பேப்பருக்கு அந்த நிறுவனம் உங்களுக்கு 40 சதவீதம் வரை அதற்கான தொகையை கொடுத்துவிடுவார்கள்.
ஆக நீங்கள் உங்கள் ஊரிலேயே ஒரு சியளவில் வால்பேப்பர் ஸ்டோரை ஆரம்பியுங்கள். நல்ல வருமானத்தை பெறுங்கள் நன்றி வணக்கம்.
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |













