இன்றும் சரி வருங்காலத்திலும் சரி கைநிறைய சம்பாதிக்கலாம்..! அப்படி ஒரு மவுஸ் இந்த தொழிலுக்கு இருக்கு..!

Xerox Shop Business Plan in Tamil

Xerox Shop Business Plan

நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல சிலர் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Xerox Shop Business Plan in Tamil: 

xerox shop business plan

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். அது என்ன தொழில் என்று கேட்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை ஜெராக்ஸ் கடை வைத்து அதன் மூலம் லாபம் பெறுவது எப்படி என்பதை பற்றி தான் கூறப்போகின்றோம்.

இன்றைய நிலையில் அதிகம் மவுஸ் இருப்பது இந்த தொழிலுக்கு தான். அனைவருமே ஏதோ ஒரு தேவைக்காக ஜெராக்ஸ் கடைக்கு கண்டிப்பாக செல்வோம். தேவை என்றால் நம்முடைய முக்கிய ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதை தான் கூறுகின்றோம்.

அதனால் அனைவரும் தங்கள் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்கு ஜெராக்ஸ் கடைக்கு தான் வரவேண்டும். அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டுமா..? அப்போ கைநிறைய லாபத்தை அள்ளித்தரும் அருமையான தொழில் இது தான்

இடம்:

இந்த தொழில் தொடங்குவதற்கு சொந்தமாக அல்லது வாடகைக்கு ஒரு கடை இருக்க வேண்டும். நீங்கள் திறக்கும் கடை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் தொடங்குவது அவசியம். அதுபோல மக்கள் விரைவில் அணுகும் இடமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் உங்கள் கடையை தேடி வருவார்கள். மேலும் ஜெராக்ஸ் கடை பள்ளி, கல்லூரி அல்லது வணிக மையத்திற்கு அருகில் இருந்தால் நல்ல வருமானத்தை சம்பாதிக்கலாம்.

முதலீடு:

இந்த தொழில் செய்வதற்கு 1 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். ஜெராக்ஸ் மெஷினின் விலை மற்றும் கடை வாடகை கடையாக இருந்தால் அதன் விலையை வைத்து பார்த்தால் 1 லட்சம் தேவைப்படும். கடை சொந்த கடையாக இருந்தால் முதலீடு குறைவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில் 

என்ன உரிமம் பெறவேண்டும்..? 

  1. ஒரு தனியுரிமை அல்லது எல்எல்சியில் உங்கள் நிறுவனத்தை பதிவு செய்வது மிகவும் முக்கியமானது.
  2. ஸ்டேஷனரி கடை வணிக உரிமங்கள் மற்றும் வர்த்தகப் பதிவுகளைப் பெறுவது அவசியமானது.
  3. நீங்கள் கணினி தொடர்பான மென்பொருளை சந்தைப்படுத்த விரும்பினால் அத்தியாவசிய உரிமங்களைப் பெற வேண்டும்.

மேல்கூறிய தகவலின் படி நீங்கள் ஜெராக்ஸ் கடையை திறந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுபோல நீங்கள் ஒரு ஜெராக்ஸ் வணிகத்தைத் தொடங்கி, புத்தகப் பைண்டிங், லேமினேஷன் போன்ற சில கூடுதல் சேவைகளை  தொடங்கினால் தினசரி 2000 முதல் 3000 வரை சம்பாதிக்கலாம்.

யாருமே சொல்லிருக்க மாட்டாங்க இந்த தொழிலை தொடங்க சொல்லி அப்படி என்ன தொழில் தெரியுமா அது

 

இதையும் படியுங்கள்⇒லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil