நெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..! Paddy cultivation in tamil..!

Advertisement

நெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..! paddy cultivation in tamil..!

நெல் பயிரிடும் முறை / paddy cultivation in tamil – நெல் என்பது புல்வகை சார்ந்த ஒரு தாவரமாகும். இந்தியாவில் பயரிடப்பட்டும் தானியங்களில் நெல் பயிர் முதலிடத்தை பெற்றுள்ளது. நெல் அதிக ஈர பதம் உள்ள நிலங்களில் நன்கு வளரும் தானியமாகும். தென் இந்திய மக்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம் என்பதாலும், உலகளவில் தானிய உற்பத்தில் நெல் பயிர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பதாலும், விவசாயிகள் நெல் பயிரை அதிகம் சாகுபடி செய்து வருகின்றன. எனவே இன்று நாம் நெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்களை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

கேழ்வரகு சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Ragi cultivation in tamil..!

ரகங்கள்:

நெல் பயிரிடும் முறை (paddy cultivation in tamil) பொறுத்தவரையில் குறிகிய கால ரகங்கள், மத்திய கால ரகங்கள், நீண்ட கால ரகங்கள் என்று நிறைய உள்ளது. அவற்றில் ஏதேனும் ரகங்களை தேர்வு செய்து நெல் சாகுபடி செய்யலாம்.

நெல் பருவகாலம்:

இந்த நெல் பயிரிடும் முறை (paddy cultivation in tamil) பொறுத்தவரை ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.

இயற்கை விவசாயம் கம்பு சாகுபடி முறைகள்..!Pearl Millet Cultivation in tamil

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:-

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும். ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.

ஒரு சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும். அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும்.

பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.

முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.

30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.

நெல் பயிரிடும் முறை:-

நெல் விவசாயம் செய்வது எப்படி | nel payir in tamil: நெல் பயிரிடும் முறை பொறுத்தவரை நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின் பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகள் 30 நாட்கள் ஆன பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும். பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.

பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.

சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

இயற்கை விவசாயம் துவரை சாகுபடி முறைகள்..! Thuvarai Sagupadi in Tamil

அரிசியின் பயன்கள்:

உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அரிசியில் உள்ளது. எனவே உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியில் செய்த உணவுகளை சாப்பிட உடல் எடை கூடும்.

சிவப்பு அரிசியில் அதிகளவு பைபர் உள்ளதால் இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement