செலவில்லாமல் இயற்கையான முறையில் களைக்கொல்லி தயாரிப்பது எப்படி..?

Advertisement

Kalaikolli Marunthu in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் இயற்கையான முறையில் செலவில்லாமல் களைக்கொல்லி மருந்து தயாரிப்பது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இன்றைய நிலையில் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல விவசாயத்தை காப்பது நம் அனைவரின் கடமை ஆகும். விவசாயம் செய்வதற்கு சில உரங்கள் மற்றும் சில களைக்கொல்லி மருந்துகள் தேவைப்படும். அந்த வகையில் இயற்கையான முறையில் களைக்கொல்லி தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..!

களைக்கொல்லி மருந்து தயாரிப்பது எப்படி..? 

Kalaikolli Marunthu Tamil

தேவையற்ற தாவரங்களை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருளை தான் களைக்கொல்லி என்று சொல்கிறோம். அதாவது, நமக்கு தேவையில்லாத பயிரின் வளர்ச்சியை தடுத்து அந்த பயிரை வளர விடாமல் அழிக்கும் பொருட்களை எல்லாம் களைக்கொல்லி என்று சொல்லலாம்.

அதுபோல களைக்கொல்லி மருந்தை நாமே எந்த செலவும் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்க முடியும். 10 லிட்டர் களைக்கொல்லி மருந்து தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

களைக்கொல்லி தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்: 

  1. சுண்ணாம்பு – 3 கிலோ
  2. கோமியம் – 3 லிட்டர்
  3. வேப்ப எண்ணெய் – 2 லிட்டர்
  4. தண்ணீர் – 10 லிட்டர்
  5. உப்பு – 4 கிலோ

களைக்கொல்லி தயாரிக்கும் முறை: 

ஸ்டேப் -1 

முதலில் 10 லிட்டர் தண்ணீரில் சுண்ணாம்பை கலந்து 10 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்.

ஸ்டேப் -2

10 மணி நேரம் கழித்து 7 லிட்டர் சுண்ணாம்பு கலந்த தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கோமியத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!
களைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி?

ஸ்டேப் -3

பிறகு இந்த கரைசலை நன்றாக கலந்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் வேப்ப எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இதை குறைந்தது 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின் அதன் மேல் பகுதியில் படிமங்கள் மிதந்து வரும். அதை நீக்கி விட வேண்டும்.

ஸ்டேப் -4

பின் இந்த கரைசலை களைச் செடிகளின் இலை மற்றும் தண்டு பகுதியில் விழுமாறு தெளிக்க வேண்டும். ஒரு வாரத்தில் தேவையற்ற செடிகள் எல்லாம் அழிந்து விடும்.

குறிப்பு: இந்த களைக்கொல்லி மருந்தை தெளிக்கும் போது நிலத்தில் தண்ணீர் நிற்க கூடாது. அதுபோல மழைக்காலங்களில் இந்த களைக்கொல்லி மருந்தை தெளிக்க கூடாது.

காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி?
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement