விவசாயத்தில் நானோ உரங்களின் பயன்பாடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Nano Fertilizer Advantages in Tamil

Nano Fertilizer Advantages in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நானோ உரங்களின் பயன்பாடு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பெரும்பாலும் நம் நாட்டில் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் பயிர்களின் வளர்ச்சிக்கு தரமான உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மட்டும் நானோ யூரியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நானோ உரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுபோல இன்று இந்த பதிவின் மூலம் நானோ உரங்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செலவில்லாமல் இயற்கையான முறையில் களைக்கொல்லி தயாரிப்பது எப்படி..?

நானோ யூரியா: 

நானோ யூரியா

இந்த நானோ யூரியா நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு குருணை வடிவ யூரியாவின் திறனை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் இது குருணை யூரியாவை விட குறைவாகவே தேவைப்படுகிறது.

 விவசாயம் செய்யும் போது அளவுக்கு அதிகமாக செயற்கை உரங்கள் போடுவதால் பயிர்கள் சேதமடைகின்றன. அதுமட்டுமில்லாமல், மண்வளத்தில் பாதிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு, விளையும் பயிர்களின் பாதிப்பு அதேபோல உணவு பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த நானோ யூரியா.  

இந்த நானோ யூரியா பயிர்களுக்கு 2 முக்கிய நிலைகளில் உதவுகின்றன. இதில் இருக்கும் மிக நுண்ணிய துகள்களை பயிர்கள் இலைகளின் துளைகள் மூலம் அல்லது பிற திறப்புகள் மூலம் எடுத்து கொள்கின்றன. இதில் இருக்கும் தழைச்சத்து, இலைகளின் செதில்களில் சேமிக்கப்பட்டு, பயிர்களுக்கு தேவைப்படும் போது கிடைக்கின்றன.

தழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..!
இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

நானோ யூரியாவின் நன்மைகள்: 

 • நானோ உரங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உரங்கள் என்று சொல்லலாம்.
 • நானோ யூரியா உணவுக்கும் மற்றும் நிலையான சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பானதாக இருக்கிறது.
 • இதன் மூலம் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
 • இது இலைகளின் வழியாக வேர்களுக்கு சென்று பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை கொடுக்கிறது.
 • நானோ யூரியா மண், நீர் மற்றும் காற்று போன்றவற்றை மாசடையாமல் பாதுகாப்பதுடன் மகசூலையும் அதிகரிக்க செய்கிறது.

நானோ யூரியா தெளிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

 1. நானோ யூரியாவை திறக்கும் போது நன்றாக குலுக்கி விட்டு திறக்க வேண்டும்.
 2. பின் நானோ யூரியாவை தெளிப்பவர் உடல் முழுவதும் மறைக்கும் படி ஆடை அணிந்திருக்க வேண்டும். கட்டாயம் கையுறை மற்றும் காலுறை போட வேண்டும்.
 3. பனிக் காலங்களில் நானோ யூரியா தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
 4. இதை காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது நல்லது.
 5. இந்த நானோ யூரியாவை உற்பத்தி செய்த நாட்களில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 6. நானோ யூரியாவின் ஆயுட்காலத்திற்கு பின் தெளித்தால் பயிர்கள் சேதமடைந்து விடும். அதனால் அதன் காலாவதி தேதியை பார்த்து பயன்படுத்த வேண்டும்.
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி?
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Pasumai Vivasayam in Tamil