இயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |

இயற்கை உரங்கள்

இயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers

வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.

நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வேளாண்மை ஆகும்.

இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..!

பழக்காடி கரைசல்:-

பழக்காடி கரைசல் என்பது கனிந்த பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் கரைசல் ஆகும். இப்போது இந்த பழக்காடி கரைசலை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 1. சாணம் – 20 கிலோ
 2. கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ
 3. தொல்லுயிர் கரைசல் – 50 கிலோ
 4. தண்ணீர் – 50 கிலோ
 5. ஜீவாமிர்தம் – 5 முதல் 10 லிட்டர்
 6. தேமோர் அல்லது அரப்புமோர் – 5 முதல் 10 லிட்டர்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள சாணம், பழங்களின் கூழ், தொல்லுயிர் கரிசல், தண்ணீர், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல் ஆகியவற்றை நன்றாக கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 15 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும்.

பிறகு இடைப்பட்ட நாட்களில் காலையும், மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். 15 நாள் கழித்து பழக்காடி கரைசலை வடிகட்டி 2 லிட்டருக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.

பயிர்களுக்கு பழக்காடி தெளிப்பதால் நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகும். இந்த கரைசலை மாதம் ஒரு முறை பயன்டுத்தினால் போதுமானது.

நன்மைகள்:

இதனால் பயிர்களுக்கு இலை வழி மூலமாக ஊட்டம் கிடைக்கும். மேலும் இந்த கரைசலை அனைத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

இதை தெளிப்பதால் காய்கறி மற்றும் பழங்களில் சுவை அதிமாக இருக்கும்.

இயற்கை விவசாயம் உரம் – பசுந்தாள் உரம்:

இயற்கை உரங்கள் பெயர்கள்:- பசுந்தாள் உரம் என்பது ஒரு குறுகிய கால சதைப்பற்றான பயிரை பயிரிட்டு அதை, அதே நிலத்தில் மடக்கி உழுவதாகும்.

இவற்றில் முக்கியமானவை பயிர்கள் என எடுத்துக்கொண்டால் அவை தக்கை பூண்டு கொழுஞ்சி, சணப்பம் அகத்தி, சீமை அகத்தி போன்றவையாகும்.

இயற்கை உரங்கள் பெயர்கள் – பசுந்தாள் உரம் தயாரிக்கும் முறை:

இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி? தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி, நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழைகளைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த உரம் தழைச் சத்தாக பயன்படுகிறது, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.

இயற்கை உரங்கள் நன்மைகள் 

Use of fertilizers:- பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறன.

நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.

இயற்கை உரங்கள் பெயர்கள் – கலப்பு உரம்:

பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல் பெற ஊட்டசத்துவாக கலப்பு உரம் பயன்படுகிறது. இந்த கலப்பு உரம் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம் வாங்க.

உரம் பெயர்கள், உரம் வகைகள் & உரம் பயன்கள்

தேவையான பொருட்கள்:

 1. நாட்டு மாட்டின் சாணம் – ஒரு டன்
 2. ஆட்டுப்புழுக்கை – ஒரு டன்
 3. எரு – ஒரு டன்
 4. இலை தழைகள் – ஒரு டன்

இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி / தயாரிக்கும் முறை:

மாட்டுச் சாணம், இழை தழைகள், ஆட்டுப்புழுக்கை, எரு ஆகியவற்றை சம விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதுவே கலப்பு உரம் ஆகும்.

பயன்படுத்தும் அளவு:

இவற்றை தயார் செய்ததும் வயல்களில் பயன்படுத்தலாம்.

இதில் சமையலறை கழிவுகள், குப்பைகள் என மக்கக்கூடிய அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

இவற்றை உழவுக்கு முன் நிலத்தில் தூவி விட்டு உழுது பயிர்களை பயிரிடலாம்.

இயற்கை உரங்கள் நன்மைகள்:

Use of fertilizers:- கலப்பு உரம் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

இதில் அனைத்து இயற்கை இடுபொருட்களும் சம அளவில் இருப்பதால் பயிர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கின்றன.

இதனால் பயிர்கள் நன்கு வளரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..!

இயற்கை உரங்கள் பெயர்கள் – தொல்லுயிர் கரைசல்:

தொல்லுயிர் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களை இப்போது படித்தறிவோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 1. புதிய சாணம் – 5 கிலோ
 2. நாட்டு சர்க்கரை – 3 கிலோ
 3. கடுங்காய்த்தூள் – 25 கிராம்
 4. அதிமதுரப்பொடி – 2 கிராம்
 5. 50 லிட்டர் பிளாஸ்ட்டிக் கேன் – 1

இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி / தயாரிக்கும் முறை:

முதலில் புதிய சாணம், நாட்டு சர்க்கரை, கடுக்காய்த்தூள் மற்றும் அதிமதுரப்பொடி ஆகியவற்றை 50 லிட்டர் பிளாஸ்ட்டிக் கேனில் சேர்த்து, அவற்றை அரை லிட்டர் நீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இரண்டு நாட்கள் கேனினை மூடிவைக்கவும்.

பின் இரண்டு நாட்கள் கழித்து பிளாஸ்ட்டிக் கேனில் உள்ள கலவை ஓரளவு உப்பி இருக்கும். அதாவது இவற்றை மீத்தேன் வாயு உண்டாவதால் இப்படி உப்பி காணப்படும். அவற்றை அவ்வப்போது மூடியை திறந்து வெளியேற்றி விடவும்.

மேலும் இந்த கரைசலை பத்து நாட்களுக்கு பிறகு எடுத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் அளவு:

ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தொல்லுயிர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு ஷ்பிரே மூலமாக தெளிக்கலாம்.

இந்த கரைசலை 20 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இயற்கை உரங்கள் நன்மைகள்:

Use of fertilizers:- பயிர்களின் சத்து பற்றாக்குறையால் இலைகள் உதிர்வதை தடுக்க பயன்படுகிறது.

மேலும் பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.

இவற்றை அனைத்து பயர்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்