நம்ம குடும்பத்தில் ஒருவர் போல் செல்லப்பிராணிகளை வளர்ப்போம். அதில் மிகவும் பாதுகாப்பாகவும் செல்லமாக வளர்ப்பது மாடு, அதெற்கென்று தனி மரியாதை உண்டு, சிலர் அதனை காலம் காலமாக தம் பிள்ளைகள் போல வளர்த்து வருகிறார்கள் , அதன் மீது தனி பாசம் வைத்திருப்பார்கள், மாடுகளுக்கு என்று தனி தனியாக எல்லாம் வைத்திருப்பார்கள். மனிதர்கள் போல் அதுவும் உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கும், அதற்கென்று உணவு பட்டியல் வைத்திருப்பார்கள், எத்தனை உணவுகள் இருக்கும் என்பதையும் அதன் பெயர்களையும் இந்த பதிவில் தெளிவாக காண்போம். மாடுகளுக்கு மூன்று விதமான தீவனங்கள் கொடுக்கிறார்கள் அதனை பார்ப்போம்…!
மாட்டு தீவனம் பெயர்கள் மற்றும் பச்சை தீவனம், உளர் தீவனம், அடர் தீவனம்:
புல் வகைகள் அதிகம் மாடுகளுக்கு கொடுப்பதால் அதனால் எந்த விதமான பிரச்சனைகளும் வராது. புல் கொடுப்பதால் அதில் அதிகம் மாவு சத்து இருப்பதால் மாடுகள் அதிகம் பால் தருகிறது.
தானிய வகை தீவனங்கள்:
சோளம், கம்பு, போன்ற தானியங்கள் உற்பத்தி பண்ணக்கூடிய தாவரங்கள் மாடுகளுக்கு கொடுப்பார்கள். அதில் ஓராண்டு வளர்ப்பு தாவரங்களில் கோ 28 மற்றும், கோ 30 என்ற வகை தாவரங்களை மாடுகளுக்கு கொடுப்பதால் சத்துக்கள் அதிகரிக்கிறது. அதே போல் பல்லாண்டு தாவரங்கள் கோ f s என்ற தானிய வகை உள்ளது அதனையும் கொடுக்கலாம். அது மாடுகளுக்கு நல்ல உணவு முறையாக இருக்கிறது. இந்த தானிய வகை தாவரங்களில் அதிகம் மாவு சத்துக்கள், தாதுக்கள் அதிகமாக இருக்கிறது. புரத சத்து மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. சோளத்தை தீவனதிற்காகவும் வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டு நெட்டை வகை சோளம் என்பது குறிப்பிடதக்கது. அதே போல் கம்பு தானியங்களில் கோ 8 என்ற தானிய பயிர் வகை இருக்கிறது, அதனையும் உணவாக கொடுக்கலாம்.
தீவன பயிர் வகைகள் வேலிமசால், முயல்மசால், குதிரை மசால், தட்டப்பயிர் இதுவும் தீவனத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரம் வகை தீவன பயிர்கள் தழைகள் மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம், அதில் மிக முக்கியாக சவண்டல் அகத்திணை கல்யாண முருங்கை மர தழைகள் அனைத்தையும் தீவனத்திற்காக பயன்படுத்தக்கூடிய உணவாக இருக்கிறது. இதில் புரத சத்து, வைட்டமின், தாது உப்புக்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இதில் மாவு சத்துக்கள் குறைவாக இருக்கிறது.
நீர் வகை தீவனம்:
நீர் வகை பயிர் அசோலா இது நீரில் வளரக்கூடிய ஒரு தாவரம். இதில் அதிக அளவு 25 முதல் 30% புரத சத்துக்கள் இருக்கிறது. இதனை மாட்டுக்கு கொடுப்பதால் புண்ணாக்கு கொடுக்கும் அளவை கொஞ்சமாக கொடுக்கலாம். இதில் அதிக அளவு சத்துக்கள் இருக்கின்றன.
உளர் தீவனம்:
உளர் தீவனம் முதலில் வைக்கோல், சோள தட்டு, இதில் அதிகம் fibre அதிகமாக இருக்கிறது. கடலைக்கொடி, போன்ற தீவனங்களை மாடுகளுக்கு கொடுத்து வருகிறார்கள்.
அடர் தீவனம்:
அடர் தீவனம் என்பன புங்கன், வேம்பு, அரிசி தவிடு, கோதுமை தவிடு, தேங்காய் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பருத்தி, எள்ளு புண்ணாக்கு என இத்தனை வகை தீவனங்களை மாடுகளுக்கு தருகிறார்கள்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>